இலங்கை அரசியல் கட்சிகளுடன் நெருக்கமான உறவுகளைப் பேண சீனா உறுதி

வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் நகரங்கள் மற்றும் நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் அதேவேளையில், இலங்கையின் அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கூட்டாண்மையை வலுப்படுத்த சீனா தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (CPC) 105ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற வரவேற்பு உபசார நிகழ்வில் உரையாற்றிய இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ ஜென்ஹொங் (Qi Zhenhong), சுதந்திரம், சமத்துவம், பரஸ்பர மரியாதை மற்றும் உள்விவகாரங்களில் தலையிடாமை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் இலங்கையின் அரசியல் கட்சிகளுடனான பரிமாற்றங்களை ஆழப்படுத்த சீன கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் இலங்கை அதிபர் அனுர குமார திஸாநாயக்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற வெற்றிகரமான சந்திப்பு, இருதரப்பு உறவுகளுக்கான புதியதொரு வரைபடத்தை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.

இரு தலைவர்களுக்கும் இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகளை நடைமுறைப்படுத்தவும், நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இருநாட்டு மக்களுக்கிடையிலான பரிமாற்றங்களை மேம்படுத்தவும், இருநாடுகளுக்கும் இடையே பகிரப்பட்ட எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதை ஊக்குவிக்கவும் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சீனா எதிர்பார்ப்பதாகத் தூதுவர் குறிப்பிட்டார்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ் சீனாவின் வளர்ச்சியை எடுத்துரைத்த தூதுவர் கீ, தனது நாடு தீவிர வறுமையை ஒழித்துள்ளதாகவும், சமூக நலன்புரிப் பாதுகாப்பை விரிவுபடுத்தியுள்ளதாகவும், முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களை அடைந்துள்ளதாகவும், உலகிலேயே மிகப்பெரிய வர்த்தக நாடு என்ற தனது நிலையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதிபர் ஷி ஜின்பிங்கினால் முன்வைக்கப்பட்ட ‘பட்டுப்பாதை திட்டம்’ (Belt and Road Initiative) மற்றும் ஏனைய உலகளாவிய அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு முயற்சிகள் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் உலகளாவிய அபிவிருத்தி, அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் சீனாவின் அர்ப்பணிப்பையும் அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.

இந்நிகழ்வில் இலங்கையின் முக்கிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், இராஜதந்திரிகள் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்