இலங்கை 2022 பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்கின்றது – முதலீட்டாளர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து வாய்ப்புகள் குறித்து ஆராயவேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் அன்றூ பட்ரிக் வேண்டுகோள் விடுத்துள்ளார்
டிசம்பரில் இடம்பெறவுள்ள இலங்கையின் பொருளாதார முதலீட்டு உச்சிமாநாடு குறித்து வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
நான் கடந்த சில வருடங்களாக பல முதலீட்டாளர்களுடன் பேசியுள்ளேன்.அவர்களுடனான உரையாடலின் போது அவர்கள் இலங்கை 2022பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுபட்டு முன்னோக்கி நகர்கின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை என்னால் உணர முடிந்தது.
மக்களின் பெரும்பான்மை ஆதரவுடன் தெரிவுசெய்யப்பட்ட அரசாங்கம் இங்கு ஆட்சிபுரிகின்றது.மிகவும் எதிர்பார்ப்புடனான சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் முன்னெடுக்கப்படுகின்றது.
இலங்கை உலகின் முக்கியமான பிராந்தியத்தில் உள்ளது அடுத்த சிலதசாப்தத்தில் உலகில் மிகப்பெரும் வளர்ச்சியை காணப்போகும் பிராந்தியத்தில் உள்ளது.
ஆகவே மீண்டும் வந்து இலங்கையை பார்வையிடுவதற்கான சரியான தருணம் இது என நான் நம்புகின்றேன்.
இலங்கையின் பொருளாதார முதலீட்டு உச்சிமாநாடு அதற்கான வாய்ப்பை வழங்குகின்றது.இந்த உச்சிமாநாடு டிசம்பரில் இடம்பெறுகின்றது.
