கொழும்பு போர்ட் சிட்டியின் முதலீட்டாளர் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம்: தெற்காசிய நாடுகள் இன்னும் ஆர்வம் காட்டவில்லை

 

வியாழக்கிழமை, 9 ஜூலை 2026,

கொழும்பு போர்ட் சிட்டி (Port City Colombo) திட்டத்தின் சமீபத்திய முதலீட்டாளர் சுயவிவரத்தின்படி, அங்குள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) முதலீட்டாளர்கள் 19% பங்கைக் கொண்டு முதலிடத்தில் உள்ளனர். சிங்கப்பூர், சீனா மற்றும் பிரித்தானியா (UK) ஆகிய நாடுகள் தலா 13% பங்களிப்பையும், அமெரிக்கா (US) 10% மற்றும் ஆஸ்திரேலியா 9% பங்களிப்பையும் வழங்கியுள்ளன.

உலக அளவில் சர்வதேச ரீதியாக அதிகம் இணைக்கப்பட்ட சில சந்தைகளின் வளர்ந்து வரும் நம்பிக்கையை இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்ற போதிலும், இதில் ஒரு குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இத்திட்டத்தின் புவியியல் அருகாமை மற்றும் ஒழுங்குமுறை நன்மைகள் இருந்தபோதிலும், இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் இன்னும் கொழும்பு போர்ட் சிட்டியின் முன்னணி முதலீட்டுச் சந்தைகளாக உருவெடுக்கவில்லை.

இருப்பினும், இதுவே போர்ட் சிட்டி அதிகாரிகளால் இந்த அபிவிருத்தித் திட்டத்தின் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

முதலீட்டாளர்களின் இந்த பன்முகத்தன்மை இத்திட்டத்தின் மீதான சர்வதேச நம்பிக்கையை பிரதிபலிக்கிறது என்று CHEC கொழும்பு போர்ட் சிட்டி நிறுவனத்தின் பிரதி நிர்வாக இயக்குனர் துல்சி அலுவிஹாரே தெரிவித்தார். எனினும், தெற்காசியாவிலிருந்து வணிகங்களை ஈர்ப்பதற்கான கணிசமான சாத்தியக்கூறுகள் இருப்பதாக அவர் நம்புகிறார்.

“எங்கள் முதலீட்டாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்று நீங்கள் பார்க்கும்போது, எல்லைகடந்த வணிக நடவடிக்கைகளில் ஏற்கனவே பழகிய முதிர்ந்த சர்வதேச சந்தைகளை நீங்கள் காண்கிறீர்கள். இப்போதுள்ள வாய்ப்பு என்னவென்றால், தெற்காசியாவிற்குள், குறிப்பாக இந்தியாவிற்குள் அதே அளவிலான விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். அங்குள்ள வணிகங்கள் உலகளவில் விரிவடைந்து வருகின்றன, அத்துடன் தங்களது தாயகத்திற்கு அருகாமையில் சர்வதேச அளவில் போட்டியிடக்கூடிய தளங்களைத் தேடுகின்றன,” என்று அவர் கூறினார்.

வழக்கமான ஒரு வணிக அபிவிருத்தித் திட்டம் போலல்லாமல், கொழும்பு போர்ட் சிட்டியானது கொழும்பு போர்ட் சிட்டி பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாகப் பாதுகாக்கப்பட்ட ஒரு விசேட பொருளாதார மண்டலமாக (SEZ) இயங்குகிறது. ஒரு தனித்துவமான ஒழுங்குமுறைக் கட்டமைப்பு, ‘ஒற்றைச் சாளர’ முதலீட்டு வசதியளிப்பவர் (single-window investment facilitator) மூலமான நெறிப்படுத்தப்பட்ட அனுமதிகள், கட்டுப்பாடற்ற வெளிநாட்டு உரிமை, 16 குறிப்பிட்ட வெளிநாட்டு நாணயங்களில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வசதி மற்றும் மேம்பட்ட மூலதன நடமாட்டம் ஆகியவற்றின் மூலம் இங்குள்ள வணிகங்கள் பயனடைகின்றன.

குறிப்பாக இந்திய நிறுவனங்களுக்கு, இத்திட்டமானது வெறும் அசையா சொத்து (real estate) வணிகத்திற்கும் அப்பால் பல நன்மைகளை வழங்குகிறது என அலுவிஹாரே நம்புகிறார்.

“நாம் அண்டை நாடாக இருப்பதனால் மட்டுமே இந்திய வணிகங்களை இலங்கையில் முதலீடு செய்யுமாறு நாம் கேட்கக் கூடாது. உண்மையான நோக்கம் என்னவென்றால், உலகளவில் போட்டியிடக்கூடிய ஒர் ஒழுங்குமுறைச் சூழலுக்குள், பிராந்திய மற்றும் சர்வதேச செயல்பாடுகளை நிர்வகிப்பதற்கான ஒரு தளத்தை கொழும்பு போர்ட் சிட்டி வழங்குகிறது என்பதேயாகும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இத்திட்டமானது தகுதிவாய்ந்த வணிகங்களின் ஊழியர்களுக்கு வெளிநாட்டு நாணயத்தில் ஊதியம் வழங்க அனுமதிப்பதுடன், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளுக்கு நீண்டகால நிதிச் சலுகைகளையும் வழங்குகிறது. அத்துடன் 44 நாடுகளை உள்ளடக்கிய இலங்கையின் இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தங்களின் (double taxation agreements) வலையமைப்பைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பையும் இது வழங்குகிறது.

கொழும்பு போர்ட் சிட்டியானது பாரம்பரிய சொத்து மேம்பாடுகளுக்கு (property developments) மேலாக, முதலீடுகள், பிராந்திய தலைமையகங்கள் மற்றும் நிதிச் சேவைகளுக்காக துபாய், சிங்கப்பூர் மற்றும் அபுதாபி போன்ற நிறுவப்பட்ட சர்வதேச வணிக மையங்களுக்கு இணையாக தங்களை மென்மேலும் நிலைநிறுத்தி வருவதாக இத்துறை அவதானிப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

கொழும்பு போர்ட் சிட்டியின் நீண்டகால சாத்தியக்கூறுகளை சர்வதேச சந்தைகள் ஏற்கனவே அங்கீகரிக்கத் தொடங்கியுள்ளதை தற்போதைய முதலீட்டாளர் சுயவிவரம் நிரூபிப்பதாக அலுவிஹாரே கூறினார்.

“இன்றைய முதலீட்டாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்பது மட்டுமல்ல ஊக்கமளிக்கும் கதை, இந்த முதலீட்டாளர்கள் தங்களது வணிகங்களுடன் எங்கு செல்ல முடியும் என்பதும் தான் முக்கியம். உலகிலேயே மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா விளங்குவதுடன், கொழும்பு போர்ட் சிட்டி வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள நன்மைகளின் மூலம் இங்குள்ள வணிகங்கள் பெருமளவில் பயனடைய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்,” என அவர் குறிப்பிட்டார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்