இலங்கை மத்தியவங்கி திறைசேரி பிணை முறி மோசடியுடன் தொடர்புபட்ட முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன மகேந்திரனின் புதிய புகைப்படத்தை ஊடகவியலாளர் உவிந்து குருகுலசூரிய வெளியிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் புகைப்படத்தைப் பகிர்ந்த குருகுலசூரிய மகேந்திரன் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தன்னைத் தொடர்பு கொண்டதாகக்தெரிவித்துள்ளார். சிங்கள மொழியில் எழுதப்பட்ட ஒரு பதிவில் மகேந்திரன் தன்னிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசியதாகவும் ஜனாதிபதி அனுர திசாநாயக்கவிடம் ஆலோசனை வழங்குமாறு கேட்டதாகவும் அவர் கூறினார். தான் மறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். குருகுலசூரிய உரையாடலில் “பல கதைகள்” இருந்ததாகவும்இ மகேந்திரனை கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாகத் தனக்குத் தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.