எயார்பஸ் லஞ்ச ஊழல் விசாரணை: இலங்கை பொலிஸ் குழு அவுஸ்திரேலியா பயணம்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் எயார்பஸ் (Airbus) விமானக் கொள்முதல் ஒப்பந்தத்துடன் தொடர்புடைய ஐரோப்பிய விமான நிறுவனம் ஒன்றிடமிருந்து பெறப்பட்ட 2 மில்லியன் அமெரிக்க டொலர் இலஞ்ச சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மற்றும் சாட்சிகளைக் கண்டறிவதற்காக, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) ஆகியவற்றின் கூட்டு சிறப்புப் பொலிஸ் குழுவொன்று அவுஸ்திரேலியாவிற்குப் பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சப் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டதாக நம்பப்படும் வங்கிக் கணக்குகளை வைத்திருந்த அவுஸ்திரேலியாவில் வசிக்கும் நபர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யவும் சான்றுகளைச் சேகரிக்கவும் இந்த விஜயம் இலக்கு வைத்துள்ளதாக ‘லங்கதீப’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அத்தகைய ஒரு வங்கிக் கணக்கின் உரிமையாளர் எனக் கூறப்படும் டபிள்யூ.டி. நிமல் பெரேரா என்பவர் அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு முன்னர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தது.

முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) கபில சந்திரசேனவின் மனைவியான பிரியங்கா நயோமலி விஜேநாயக்க மற்றும் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷவின் மகனான ஷமீந்திர ராஜபக்ஷ ஆகியோர் முக்கிய சந்தேக நபர்களில் அடங்குவர்.

இருவரும் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள நிலையில், கொழும்பு மற்றும் கோட்டை நீதவான் நீதிமன்றங்களால் அவர்களுக்கு எதிராக ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவாலும், கோட்டை நீதவான் நீதிமன்ற வழக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தாலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

2013 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தினால் பத்து விமானங்கள் கொள்முதல் செய்யப்பட்டபோது, புரூணையில் போலியான நிறுவனமொன்றை நிறுவி, ஐரோப்பிய சிவில் விமானப் போக்குவரத்துப் பெருநிறுவனமான ‘European Aeronautic Defence and Space Company’ (ADS) இடமிருந்து EUR 1,454,645.54 (2 மில்லியன் அமெரிக்க டொலர்) லஞ்சமாகப் பெறப்பட்டமை தொடர்பாகவே புலனாய்வு விசாரணைகள் கவனம் செலுத்தி வருகின்றன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்