பாக்கிஸ்தான் மேற்கொண்ட வான்தாக்குதலில் பல இளம் ஆப்கான் கிரிக்கெட் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதை தொடர்ந்து பாக்கிஸ்தானில் இடம்பெறவிருந்த முத்தரப்பு தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது.

பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் கோழைத்தனமான தாக்குதல் என ஆப்கான் குறிப்பிட்டுள்ளது.
ஐநதுபொதுமக்களும் மூன்று இளம் கிரிக்கெட் வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அவர்கள் கொல்லப்பட்டமை குறித்து ஆழ்ந்த கவலையையும் துயரத்தையும் வெளியிட்டுள்ளது.
கொல்லப்பட்டவர்களிற்கு மரியாதை செலுத்தும் விதத்தில் பாக்கிஸ்தானில் இடம்பெறவிருந்த முத்தரப்பு தொடரிலிருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தானின் கிரிக்கெட் கட்டு;ப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
