600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான சொத்துகளை முறைகேடாக சேர்த்ததாக மெர்வின் சில்வா மீது குற்றச்சாட்டு – ‘தினமின’ செய்தி

முன்னாள் அமைச்சர் மெர்வின் சில்வாவிற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள சட்டவிரோத சொத்துக் குவிப்பு வழக்கின் நீதிமன்ற விசாரணைகளின் போது, அவர் தொழில் மற்றும் பொதுஜன தொடர்பு அமைச்சராகப் பணியாற்றிய இரண்டு ஆண்டுகாலப் பகுதியில், 600 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியுடைய சொத்துகளைச் சேர்த்துள்ளமை தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளதாக அரசினால் நடாத்தப்படும் ‘தினமின’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்கும் 2012 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், தனது சட்டப்பூர்வ வருமான மூலங்கள் மூலம் தெளிவுபடுத்த முடியாத சொத்துகளை மெர்வின் சில்வா கையகப்படுத்தியுள்ளார் எனக் கூறி, லஞ்ச அல்லது ஊழல் பற்றிய சாட்டப்பாராட்டுகளை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (CIABOC) இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மொஹமட் மிஹைல் முன்னிலையில் ஆகஸ்ட் 20 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. அன்றைய தினம், முன்னாள் அமைச்சர் பராமரித்து வந்த பல வங்கிக் கணக்குகள் தொடர்பான சாட்சியங்களை வழங்குவதற்காக பல வங்கிகளின் மேலாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெர்வின் சில்வா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்புடைய பல நிலையான வைப்புகள் (Fixed Deposits), வங்கிக் கணக்குகள், அதிக பெறுமதியுடைய காணி கொள்வனவுகள், சொகுசு வாகனங்கள், காப்பீட்டுக் கொள்கைகள் (Insurance policies) மற்றும் ஏனைய நிதிப் பரிவர்த்தனைகள் குறித்து நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக ‘தினமின’ சுட்டிக்காட்டியுள்ளது.

குறிப்பிட்ட ஒரு வங்கியில் மாத்திரம் 182 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிலையான வைப்புகள், கொழும்பு மற்றும் ராஜகிரியில் உள்ள பல காணிகள், இரண்டு வருட காலப்பகுதிக்குள் கொள்வனவு செய்யப்பட்ட ஏழு வாகனங்கள் மற்றும் ஏனைய நிதி முதலீடுகள் ஆகியவை இந்தச் சொத்துகளில் முக்கியமானவையாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.

குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ள காலப்பகுதியில் மெர்வின் சில்வா சுமார் 485 மில்லியன் ரூபாய் பெறுமதியான சட்டவிரோத சொத்துகளை எவ்வாறு சேர்த்தார் என்பதை நிரூபிக்க அரசுத் தரப்பு முயற்சிப்பதாகவும் அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை லஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் அம விஜேசிங்க நடாத்தி வருகின்றார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு