சட்டவிரோத வழிமுறைகள் மூலம் சம்பாதிக்கப்பட்ட பணம், சொத்துக்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான புதிய பொலிஸ் பிரிவினை இலங்கை பொலிஸ் திணைக்களம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தவிஜயபால இதனை இன்று ஆரம்பித்துவைத்தார்.
பிசிஐடி எனப்படும் இந்த பொலிஸ் விசாரணை பிரிவு சட்டவிரோதமான முறையில் சம்பாதிக்கப்பட்ட சொத்துக்கள் பணம் குறித்து 34 அரசஸ்தாபனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்படும்.