இலங்கை அரசாங்கம் இலங்கை மின்சார சபையை ஒருபோதும் தனியார் மயப்படுத்தாது என வலுசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
புதிய திட்டத்தின் கீழ் உருவாக்கப்படும் நான்கு நிறுவனங்களிற்குள் மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் உள்வாங்கப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய நிறுவனங்களிற்குள் தாங்கள் உள்வாங்கப்படுவதை விரும்புகின்றார்களா என்பதை 27ம் திகதிக்குள் ஊழியர்கள் தெரியப்படுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
