பாரியளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு மரணதண்டனை விதிக்கவேண்டு;ம் என வேண்டுகோள் விடுத்துள்ள சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயம்ஜகத் வீரசிங்க அவ்வாறான நபர்கள் நாட்டை சமூகத்தை அழிக்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தற்போது 36 சிறைகள் உள்ளன அவற்றில்10000 பேரை உள்வாங்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது 36000 சிறைக்கைதிகள் உள்ளனர் இவர்களில் 65 வீதமானவர்கள் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.