எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமரசம்பத்தசநாயக்க தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்தவிஜயபாலவை நோக்கி அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“நீங்கள் என்னை கொலை செய்வதற்கு திட்டமிடுகின்றீர்கள் நீங்கள் அப்படி செய்தால் பின்தொடர்ந்து துரத்திதுரத்தி பழிவாங்குவேன் என அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ள அமைச்சர் தனக்கும் அரசாங்கத்திற்கும் அவ்வாறான நோக்கம் எதுவும் கிடையாது என தெரிவித்துள்ளார்.
