விடுதலைப்புலிகளின் நிர்வாக கட்டமைப்பில் இருக்கின்ற போது ;வடக்குகிழக்கிலே போதைப்பொருள் பாவனை என்பது ஒரு சதவீதமேனும் இருக்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு ரவீந்திரன் கோடீஸ்வரன் அவ்வேளை சிறந்த நிர்வாக கட்டமைப்புடன் வடக்குகிழக்கில் வாழ்கின்ற ஒவ்வொருவரும் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக செயற்பட்டனர் என குறிப்பிட்டுள்ளார்
நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் விடுதலைப்புலிகள் காலத்தில் போன்று சரியான திட்டங்களை விதித்து நாட்டில் போதைப்பொருள் பாவனையை ஒழிக்க நடவடிக்கை எடுக்கவேண்டு;ம் என தெரிவித்துள்ளார்
கடுமையான தண்டனைகளை வழங்கியும் கடுமையான சட்டதிட்டங்களை விதித்தும் போதைப்பொருள் உள்ளிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களுக்கும் அதனுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளுக்கும் தகுந்த தண்டனையை வழங்கவேண்டிய கடமையும் பொறுப்பும் அரசாங்கத்திற்குள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
