கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகள் முடிவி;ற்கு வந்துவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
கனடா வெளியிட்ட வரி எதிர்ப்பு விளம்பரம் காரணமாக அந்த நாட்டுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை முடிவிற்கு கொண்டுவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கனடா அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் வெளியான விளம்பரம் குறித்தே அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருந்தார்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் றீகன் வரிகள் ஒவ்வொரு அமெரிக்க பிரஜைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்ததை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரத்தை கனடாவின் ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு நிமிட விளம்பரத்தில் நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க மற்றும் கனேடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட கிரேன்கள் உள்ளிட்ட படங்களின் மீது ரீகனின் குரல் கதை சொல்வதைக் கேட்கலாம்
இந்த காணொளி வெளிநாட்டு வர்த்தகத்தை மையமாகக் கொண்ட ரீகனின் 1987 தேசிய வானொலி உரையை மேற்கோள் காட்டுகிறது.
“வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு வரி விதிப்போம்” என்று யாராவது கூறும்போது அவர்கள் அமெரிக்க தயாரிப்புகளையும் வேலைகளையும் பாதுகாப்பதன் மூலம் தேசபக்தி காரியத்தைச் செய்வது போல் தெரிகிறது. சில நேரங்களில் சிறிது காலத்திற்கு அது வேலை செய்யும் ஆனால் குறுகிய காலத்திற்கு மட்டுமே” என்று ரீகன் கூறுகிறார்.
ஆனால் நீண்ட காலத்திற்கு இத்தகைய வர்த்தக தடைகள் ஒவ்வொரு அமெரிக்கரையும் தொழிலாளியையும் நுகர்வோரையும் பாதிக்கின்றன.
“அதிக கட்டணங்கள் தவிர்க்க முடியாமல் வெளிநாட்டு நாடுகளின் பழிவாங்கலுக்கும் கடுமையான வர்த்தகப் போர்களைத் தூண்டுவதற்கும் வழிவகுக்கும்… சந்தைகள் சுருங்கி சரிகின்றன வணிகங்களும் தொழில்களும் மூடப்படுகின்றன மில்லியன் கணக்கான மக்கள் வேலை இழக்கிறார்கள்இ” என்று ரீகன் மேலும் கூறுகிறார்
டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பல கனேடிய இறக்குமதிகளுக்கு 35% வரி விதித்துள்ளது,
