ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தன்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
என்னை கொலைசெய்வதற்கான சதிமுயற்சி குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு களுத்துறைக்கான பிரதிபொலிஸ்மா அதிபருக்கு பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
என்னை கொலை செய்வதற்கான முயற்சிகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் வேண்டுகோள் விடுத்துள்ளார்,சந்தேகநபரின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது,நான் சுட்டுக்கொல்லப்படுவேன் என அந்த கடிதம் தெரிவிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விடயம் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை நாடாளுமன்றமும் அரசாங்கமும் மேற்கொள்ளவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை இது குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச இது பாரதூரமான விடயம் இது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் உயிருக்கு ஆபத்து தொடர்பான விடயம் என தெரிவித்துள்ளார்.
உரிய பாதுகாப்பு வழங்கப்படாததால் வெலிகம பிரதேசபையின் தலைவர் சுட்டுக்கொல்லப்பட்டார்,அவர் பொலிஸாரிடம் பாதுகாப்பை கோரியபோது அவர்கள் உரிய பாதுகாப்பை வழங்கவில்லை,எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பில்லை,எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர்,இது நகைச்சுவை அல்லது வேடிக்கையல்ல ஒருவர் கொல்லப்பட்டால் எங்களால் என்ன செய்ய முடியும் வெலிகம சம்பவத்திலிருந்து நாங்கள் பாடம் கற்கவேண்டும் என எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
