மதுபான உற்பத்திக்கான உரிமம் வழங்குவது குறித்து பேச்சுவார்த்தைகளிற்காக பிரதியமைச்சர் சத்துரங்க அபேசிங்கவும் நாடாளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திகவும் கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் வர்த்தகர் ஒருவரை கேள்விக்குரிய விதத்தில் சந்தித்தனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளதை பிரதியமைச்சர் அபேசிங்க நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பியுள்ள பிரதியமைச்சர் சாணக்கியன் கூற்றினால் தனது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார்.
பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் என்ற அடிப்படையில் நாங்கள் முதலீடுகள் குறித்த பேச்சுவார்த்தைகளிற்காக முதலீட்டாளர்களை தனிநபர்களை நாளாந்தம் சந்திப்பது வழமை ஆனால் சாணக்கியன் தெரிவித்துள்ள சந்திப்பு ஒருபோதும் இடம்பெறவில்லை,என அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள சாணக்கியன் அரசாங்கம் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் சிசிடிவியை ஆராயவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
