மொனராகலை மர்ம கட்டிடம் யாருக்கு சொந்தனமானது ? சிஐடியினர் தீவிர விசாரணை – கோட்டா மறுக்கின்றார்

மொனராகலையில் மாணிக்க கங்கை பகுதிக்குள் காணப்படும் இரண்டுஅடுக்கு மாடிவீடு யாருடையது என்பதை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளை சிஐடியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
அந்த கட்டிடம் ஜி ராஜபக்ச என்பவரின் பெயரில் உள்ளது, ஆனால் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அது தன்னுடையதில்லை என தெரிவித்து வருகின்றார்.
சுற்றுசூழல் ரீதியில் மிகவும் முக்கியமான பகுதியில் அவ்வாறானதொரு கட்டிடத்தை எப்படி கட்டினார்கள் என்பதே முக்கிய கேள்வியாக காணப்படுகின்றது.
2007 இல் இ;ந்த கட்டிடத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பமான நிலையில் குறித்து கட்டிடம் பற்றி பல அரசஸ்தாபனங்கள் சிஐடியினரிடம் முறைப்பாடு செய்ததை தொடர்ந்து இந்த கட்டிடம் குறித்து கவனம் திரும்பியது.


முகநூல் பதிவொன்றில் கோட்டாபய ராஜபக்ச அந்த கட்டிடம் தன்னுடையது என தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ளார்.’’கதிர்காமம் மாணிக்க கங்கைக்கு அருகில் உள்ள கட்டிடம் என்னுடையதல்ல என்பதை நான் உறுதியாக தெரிவிக்க விரும்புகின்றேன்.ஜி ராஜபக்ச என்ற பெயரின் கீழ் அந்த வீட்டிற்கு மி;ன்சார இணைப்பை பெறுவதற்கு விண்ணப்பித்துள்ளதாலேயே எனது பெயர் இதில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது,ஆனால் மின்சார இணைப்பிற்கான விண்ணப்பத்தில் உரிய கையெழுத்து இல்லை,என அவர் தெரிவித்துள்ளார்.
12 அறைகளை கொண்ட பெரிய மாடிவீட்டை விட பெரிய அந்த கட்டிடத்தை மொனராகலயின் நீர்ப்பாசன திணைக்களம் கையகப்படுத்தியுள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நீர்ப்பாசன திணைக்களத்தின் ஏனைய பிரிவுகளின் அதிகாரிகளின் விஜயத்தின் போது இந்த கட்டிடத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட கட்டிடத்தின் சட்டபூர்வதன்மை;, உரிமை மற்றும் நோக்கம் குறித்து சிஐடியினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்