வெலிகம பிரதேசசபை தலைவர் சுட்டுக்கொல்லப்படுவதற்கு முன்னர் தனக்கு பாதுகாப்பு கோரி பொலிஸ்மா அதிபருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளார். பொலிஸ் தலைமையகம் இதனை உறுதி செய்துள்ளது.
லசந்த விக்கிரமசேகர இந்த கடிதத்தை செப்டம்பர் ஆறாம் திகதி பொலிஸ்மா அதிருபருக்கும் பல உயர் பொலிஸ் அதிகாரிகளிற்கும் அனுப்பிவைத்தார் என்பதை பொலிஸ் தலைமையகம் உறுதி செய்துள்ளது.
குறிப்பிட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வெடிகம மிடிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளிற்கு மாத்தறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உத்தரவு பிறப்பித்தார் என பொலிஸ் தலைமயகம் தெரிவித்துள்ளது.
எனினும் பிரதேச சபை தலைவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதா என்பது குறித்து பொலிஸ் அறிக்கையில் எதுவும் குறி;ப்பிடப்படவில்லை
