கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கான வரியை அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வரிக்கு எதிரான கனடாவின் ஒன்டாரியோவின் விளம்பரம் குறித்த தனது எதிர்ப்பை வெளியிடுவதற்காக டிரம்ப் வரிகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளார்.
சனிக்கிழமை சமூக ஊடகபதிவில் அந்த விளம்பரத்தை மோடிசடியானது என வர்ணித்துள்ள டிரம்ப் சர்வதேச பேஸ்போல் தொடருக்கு முன்னதாக அந்த விளம்பரத்தை அகற்றாதமைக்காக கனடா அதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார்.
உண்மையை அவர்கள் தவறாக சித்தரித்ததாலும் கனடாவிற்கு எதிரான வரியை அவர்கள் தற்போது செலுத்துவதை விட அதிகரிக்கின்றேன் என டிரம்ப் சமூக ஊடகபதிவில் தெரிவித்துள்ளார்.
கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக கடந்த வியாழக்கிழமை டிரம்ப் அறிவித்திருந்தார்.
டிரம்ப் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து குறிப்பிட்ட வரிக்கு எதிரான விளம்பரத்தை அமெரிக்காவில் வெளியிடப்பபோவதில்லை என ஒன்டாரியோ பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் றீகன் வரிகள் ஒவ்வொரு அமெரிக்க பிரஜைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என தெரிவித்ததை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட விளம்பரத்தை கனடாவின் ஊடகம் ஒன்று வெளியிட்டிருந்தது
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஒரு நிமிட விளம்பரத்தில் நியூயார்க் பங்குச் சந்தை மற்றும் அமெரிக்க மற்றும் கனேடிய கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட கிரேன்கள் உள்ளிட்ட படங்களின் மீது ரீகனின் குரல் கதை சொல்வதைக் கேட்கலாம்
இந்த காணொளி வெளிநாட்டு வர்த்தகத்தை மையமாகக் கொண்ட ரீகனின் 1987 தேசிய வானொலி உரையை மேற்கோள் காட்டுகிறது.
“வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு வரி விதிப்போம்” என்று யாராவது கூறும்போது அவர்கள் அமெரிக்க தயாரிப்புகளையும் வேலைகளையும் பாதுகாப்பதன் மூலம் தேசபக்தி காரியத்தைச் செய்வது போல் தெரிகிறது. சில நேரங்களில் சிறிது காலத்திற்கு அது வேலை செய்யும் ஆனால் குறுகிய காலத்திற்கு மட்டுமே” என்று ரீகன் கூறுகிறார்.
ஆனால் நீண்ட காலத்திற்கு இத்தகைய வர்த்தக தடைகள் ஒவ்வொரு அமெரிக்கரையும் தொழிலாளியையும் நுகர்வோரையும் பாதிக்கின்றன.
“அதிக கட்டணங்கள் தவிர்க்க முடியாமல் வெளிநாட்டு நாடுகளின் பழிவாங்கலுக்கும் கடுமையான வர்த்தகப் போர்களைத் தூண்டுவதற்கும் வழிவகுக்கும்… சந்தைகள் சுருங்கி சரிகின்றன வணிகங்களும் தொழில்களும் மூடப்படுகின்றன மில்லியன் கணக்கான மக்கள் வேலை இழக்கிறார்கள்இ” என்று ரீகன் மேலும் கூறுகிறார்
