அலுவலகத்திலிருந்து வேலை நேரம் முடிந்து வீடு திரும்பிய பின்னரும் பணி தொடர்பாக அழைக்கின்றார்களா?
அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை துண்டிப்பதற்கான உரிமையை வழங்கும் உத்தேச சட்டமூலம் குறித்த யோசனையை இந்தியாவின் கேரள மாநிலம் முன்வைத்துள்ளது.

வேலைநேரத்திற்கு மேலதிகமாக வரும் அலுவலகம் தொடர்பான தொடர்பாடல்களை தங்கள் மனோநலத்தினை கருத்தில் கொண்டு ஊழியர்கள் தவிர்க்கலாம் அல்லது துண்டிக்கலாம்.

இந்த உத்தேச சட்டமூலத்தின் முக்கிய அம்சங்கள்
ஊழியர்கள் தொலைபேசி இணைய அழைப்புகளை துண்டித்தமைக்காக நிறுவனங்கள் அவர்களை தண்டிக்க முடியாது.
தனியார் துறையில் ஏற்படும் வேலைதொடர்பான பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கான குழுவை அமைக்கவேண்டும்.

இந்த சட்டத்தை ஏற்காத நிறுவனத்திற்கு எதிராக தொழில் ஆணையாளர் சட்டநடவடிக்கைகளிற்கு பரிந்துரை செய்யலாம்
.
இந்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் இந்தியாவில் துண்டிப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொண்ட முதல் மாநிலமாக கேரளா மாறும் – சட்டபூர்வமான உரிமை.
உலகில் பல நாடுகள் இவ்வாறான சட்டத்தினை கொண்டுள்ளன.
2016 இல் பிரான்ஸ் இந்த சட்டமூலத்தினை நிறைவேற்றியது.

