ஐநாவின் தீர்மானம் தமிழர் தாயகத்தில் பல வருடங்களாக இடம்பெறும் அரசவன்முறைக்கு காரணமான இனப்படுகொலையின் கூறுகளை புறக்கணிக்கின்றது- பிரித்தானிய தமிழர் பேரவை மனித உரிமை ஆணையாளருக்கு கடிதம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் குறித்து எச்சரிக்கும் கடிதமொன்றை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க்கிற்கு எழுதியுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை இந்ததீர்மானம் காரணமாக இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதல் மேலும் வலுப்படும் ஆபத்துள்ளது என தெரிவித்துள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் சிங்கள தமிழ் தேசங்களிற்கு இடையிலான மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணமுயலவில்லை என தெரிவித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை இந்த தீர்மானம் தமிழர் தாயகத்தில் பல வருடங்களாக இடம்பெறும் அரசவன்முறைக்கு காரணமான இனப்படுகொலையின் கூறுகளை புறக்கணிக்கின்றது என தெரிவித்துள்ளது.

புதிய தீர்மானம் பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கைய தகர்த்துள்ளது,1956ம் ஆண்டு முதல் இலங்கையில் திட்டமிடப்பட்ட வகையில் சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை வெளிப்படுத்தும் 120,000க்கும் மேற்பட்ட ஆவணங்களை ஐநா சேகரித்து வைத்துள்ளது என்பதையும் நினைவுபடுத்தியுள்ளது.
நம்பகதன்மை மற்றும் சுயாதீன தன்மையற்ற உள்நாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை தொடர்ந்தும் நம்பியிருப்பது குறித்து எச்சரித்துள்ள பிரித்தானிய தமிழர் பேரவை மனித உரிமை பேரவை உள்நாட்டு பொறுப்புக்கூறும் பொறிமுறையை நம்பியிருப்பது இனப்படுகொலைக்கு எதிரான சகிப்புத்தன்மையை வெளிப்படுத்தலாம் அல்லது இனப்படுகொலைக்கு ஒத்த செயல்களை நியாயப்படுத்துவது போல தோன்றலாம் என குறிப்பிட்டுள்ளது.
வடக்குகிழக்கில் நில அபகரிப்புகள்,பலவந்தமான குடித்தொகை மாற்றங்கள் மதகலாச்சார பாரம்பரியத்தை அழிப்பது போன்ற அரச ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய தமிழர் பேரவை இவை வேரூன்றிய கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைக்கான சான்றுகள் என தெரிவித்துள்ளது.

10 10 25 Letter to the High Commissioner (HRC) Fn

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு