டிரம்ப் ஜி ஜின்பிங் சந்திப்பிற்கு முன்னதாக சீனாவும் அமெரிக்காவும் வர்த்தக உடன்பாடு தொடர்பான கட்டமைப்பு குறித்து இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளன.
இருநாடுகளும் வர்த்தக ஒப்பந்த கட்டமைப்பு குறித்து இணங்கியுள்ளன ,இருநாடுகளின் தலைவர்களும் இந்த வாரம் சந்திக்கும்போது இது குறித்து ஆராயப்படும் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.
டிக்டொக் அமெரிக்காவில் செயற்படுவது குறித்த இறுதி ஒப்பம் குறித்தும் அரியவகை கனிமங்களை ஏற்றுமதி செய்வதற்கு சீனா விதித்துள்ள இறுக்கமான கட்டுப்பாடுகள் குறித்தும் இரு நாடுகளின் தலைவர்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்கள் என அமெரிக்காவின் திறைசேரி செயலாளர் ஸ்கொட் பெசென்ட் தெரிவித்துள்ளார்
டொனால்ட் டிரம்ப் எச்சரித்தபடி சீனாவிற்கு எதிரான 100 வீத தடைகளை விதிப்பார் என நான் எதிர்பார்க்கவில்லை,அதேவேளை சீனா அமெரிக்காவிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவில் சோயாபீன்சினை கொள்வனவு செய்யும் என எதிர்பார்க்கின்றேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மிகப்பெரிய இரண்டு பொருளாதாரங்களிற்கு இடையில் வர்த்தகபோர் மேலும் தீவிரமடைவதை தடுப்பதற்கான முயற்சியில் இரண்டு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க சீன தலைவர்கள் வியாழக்கிழமை தென்கொரியாவில் சந்திக்கவுள்ளனர்.
இரண்டு நாடுகளும் இரு தலைவர்களிற்குமான குறிப்பிடத்தக்க கட்டமைப்பை எட்டியுள்ளன வரிகள் தவிர்க்கப்படும் என அமெரிக்க திறைசேரி செயலாளர் தெரிவித்துள்ளார்.