2026 இல் உலகில் விஜயம் மேற்கொள்வதற்கான சிறந்த25 இடங்களில் ஒன்று யாழ்ப்பாணம் – லோன்லி பிளனட்

2026 இல் உலகில் விஜயம் மேற்கொள்வதற்கான 25 சிறந்த இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை லோன்லி பிளனட் தெரிவு செய்துள்ளது.
21ம் திகதி வெளியான 2026 பயணத்தில் சிறந்தது 2026 பதிப்பில் லோன்லிபிளனட் யாழ்ப்பாணத்தையும் தெரிவு செய்துள்ளது.


லோன்லி பிளனட் அதன் பட்டியலில் இரண்டாவது இடத்தை யாழ்ப்பாணத்திற்கு வழங்கியுள்ளதுடன் யாழ்ப்பாணம் அதன் கலாச்சாரம் உணவுவகைகள் தீவு சாகசங்களிற்கு பெயர்பெற்றது என வர்ணித்துள்ளது.

மலபார் ஹோம்ஸ்டே போன்று குடும்பத்தால் நடத்தப்படும் ஹோம்ஸ்டேக்கள் 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தை ஒரு கலாச்சார இடமாக மீண்டும் உயிர்ப்பித்து வருகின்றன என தெரிவித்துள்ள லோன்லிபிளனட்,யாழ்ப்பாணத்தில் நுணுக்கமான வரலாற்றை புரிந்துகொள்ள மீண்டு;ம் புதுப்பிக்கப்பட்டுள்ள யாழ் நூலகத்திற்கு விஜயம்வமேற்கொள்ளுங்கள்,இது யுத்தத்தின் போது தீக்கிரையாக்கப்பட்டது.
ஐங்கோண வடிவிலான யாழ்ப்பாண கோட்டை முதலில் 1619 இல் போர்த்துக்கீசரால் கட்டப்பட்டது.மேலும் இரண்டு பதுங்குழிகள் ஆடம்பர யாழ்ப்பாண பொக்ஸ் ரிசோர்ட்டில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளன.


யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு மணிநேர படகுபயணம் நெடுந்தீவிற்கு கொண்டு செல்லும், அது ஆழமற்ற பவளப்பாறைகள் ,வேலிகளால் அமைக்கப்பட்ட வீடுகள்,டெல்ப் விலேஜ் ஸ்டே போன்ற ஹோம்ஸ்டேக்களுடன் காணப்படும் இந்த தீவு வீட்டில் சமைக்கப்பட்ட உணவுகளுடன் மெதுவாக சைக்கிளில் பயணம் செய்வதற்கு உகந்தது.
யாழ்ப்பாணத்தில் பயணம் செய்வது இலகுவானது துவிச்சக்கர வண்டி முச்சக்கரவண்டி பேருந்துகள் படகுகள் மூலம் பயணம் செய்யலாம்.பேருந்துகளும் புகையிரதங்களும் இலங்கை தலைநகர் கொழும்புடன் யாழ்ப்பாணத்தை இணைக்கின்றன.சென்னையிலிருந்து நேரடி விமான சேவைகளும் உள்ளன.
ஆனால் எல்லாவற்றையும் விட விருந்தோம்பல் உணர்வு இங்கு ஆழமாக காணப்படுகின்றது அழகான புன்னகைகள்

நுரைத்த தேநீர் கோப்பைகளும் நண்டு கறி விருந்துகளும் ஏராளமாக உள்ளன” என்று உலகளாவிய பயண வழிகாட்டி விவரிக்கிறது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்