பணம் அல்லது போதைப்பொருளுக்காக – கூலிக்கு கொலைசெய்யும் கொலையாளிகள் – கடந்த பத்து மாதங்களில் 103 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்

பொலிஸாரின்விசாரணைகளின் மூலம் சமீபத்தைய துப்பாக்கிசூட்டு சம்பவங்களை பணத்திற்காக கொலை செய்பவர்களே மேற்கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இந்த கொலைகளை செய்தவர்களிற்கும் கொல்லப்பட்டவர்களிற்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பதும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு பணத்திற்காக கொலை செய்பவர்கள் அனேகமாக போதைப்பொருளிற்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கும் பொலிஸ் விசாரணையாளர்கள் தங்களிற்கு தேவையான போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்கான பணத்திற்காக இவர்கள் கொலைகளை செய்ய இணங்குகின்றனர் என குறிப்பிடுகின்றனர்.
நான்கு இலட்ச்சம் முதல் ஐந்து இலட்ச்சம் வரை வாங்கிக்கொண்டு இவர்கள் இந்த கொலைகளில் ஈடுபடுகின்றனர் சில சந்தர்ப்பங்களில் இவர்களிற்கு போதைப்பொருளும் வழங்கப்படுகின்றது என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஜனவரி மாதம் முதல் இலங்கையில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிசூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன,இதில் துப்பாக்கி சூடு இடம்பெற்ற இடத்தில் காணப்பட்ட அப்பாவிகள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த 103 துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 73 சம்பவங்களிற்கு திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களே காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களிற்கு எதிராக விசேட அதிரடிப்படையினரை பயன்படுத்தியுள்ள போதிலும்,அதிகரித்து வரும் இந்த ஆபத்தை கட்டுப்படுத்த பல முன்கூட்டிய நடவடிக்கைகள் அவசியம் என்பதை அதிகாரிகள் ஏற்றுக்கொள்கின்றனர்.
பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸ் வட்டாரங்கள் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களால் உள்வாங்கப்படக்கூடிய நிலையில் உள்ள தனிநபர்களிற்கு புனர்வாழ்வு வழங்குவதற்கான திட்டமும் உள்ளதாக தெரிவித்துள்ளன.

 

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்
75545720-bcff-11f1-babe-4199b0e7ccea
டுபாய்-டெல் அவிவ் விமானத் சம்பவம்- ஈரானுக்குத் தொடர்புள்ளதா என்பதை இப்போது கூற முடியாது, இஸ்ரேலிய பிரதமர்
colombo port city
மத்திய கிழக்கு நாடுகளில்- கொழும்பு துறைமுகநகர முதலீட்டு மாநாடுகள்