இலங்கையில் ஹோட்டல்களை கட்டவிரும்பும் முதலீட்டாளர்கள் கட்டுமான செலவு அதிகமாகயிருப்பதாலும் எரிபொருள் விலைகள் அதிகமாகயிருப்பதாலும் தங்கள் திட்டத்தினை முன்னெடுக்க தயங்குகின்றனர் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது என இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் அர்ஜூன ஹேரத் தெரிவித்துள்ளார்.
விருந்தோம்பல் தொழில்துறையில் முதலீட்டாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால் போதிய இலாபமின்மை என அவர் தெரிவித்துள்ளார்.
கட்டுமானச் செலவு அதிகமாக இருப்பதால் முதலீடுகள் அதிக லாபகரமானதாக இருக்காது. எரிசக்திச் செலவு அதிகமாக உள்ளது அது ஒரு கட்டுப்படுத்தும் காரணியாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இதற்கு அப்பாலும் குறிப்பிடத்தக்க முதலீடுகள் வருகின்றன என இலங்கை முதலீட்டு சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்
இரும்புஓடுகள் மற்றும் பிற கட்டுமானப் பொருட்களுக்கு இறக்குமதி பாதுகாப்பு வழங்கப்படுவதால் இலங்கையில் கட்டுமானப் பொருட்களின் விலை மிக அதிகமாக உள்ளது.இரண்டு ராஜபக்சஆட்சிகளின் போது தடையற்ற வர்த்தகம் ஊக்கமளிக்கப்படாததாலும் இறக்குமதி மாற்றீட்டைத் தேடும் வாடகை ஊக்குவிக்கப்பட்டதாலும் இறக்குமதி பாதுகாப்பு விரிவடைந்தது.
