எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களிற்கு உரிய பாதுகாப்பை வழங்குவதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்தனர். சபாநாயகர் தலைமையில் இடம்பெற்ற இந்த கூட்டத்தில் பொலிஸ்மா அதிபரும் கலந்துகொண்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்த வேண்டுகோளை பொலிஸ்மா அதிபரிடம் சமர்ப்பித்துள்ள தெரிவித்துள்ள சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கொள்கை தீர்மானமொன்றை எடுத்துள்ளது இதற்கு அப்பால்இன்றைய வேண்டுகோள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் தனது கடமையை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.
