CNN
அமெரிக்காவுடனான சீனாவின் வர்த்தக ஒப்பந்தம் அவர்களின் தற்போதைய வர்த்தகப் போரின் ஒரு முக்கியப் பிரச்சினையான (சிக்கலான விஷயம்) அரிய பூமி கனிமங்களைத் தீர்க்க முற்படுகிறது.
கடந்த சில மாதங்களாக அமெரிக்க வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்களுடன் பல சுற்றுப் பேச்சுக்கள் நடந்தபோதிலும் முக்கியமான அரிய பூமி உலோகங்களை விடுவிப்பதாக டிரம்ப் நிர்வாகத்திற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சீனா தொடர்ந்து காலதாமதம் செய்தது.
மேலும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அரிய பூமி கனிம உரிமங்களை விரைவாக வழங்குவதாக முன்னர் அளித்த எந்தவொரு உறுதிமொழியும் ஒருபோதும் நிறைவேறவில்லை. இந்த மாத தொடக்கத்தில் கட்டுப்பாடுகளைப் பெருமளவில் விரிவுபடுத்துவதன் மூலம் பெய்ஜிங் தனது கட்டுப்பாடுகளை மேலும் இறுக்கியது.
வியாழக்கிழமை ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் புதிதாக விதிக்கப்பட்ட அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்த சீனா ஒப்புக்கொண்டது இருப்பினும் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்ட ஆரம்பக் கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என்று தோன்றுகிறது.
அரிய பூமி கனிமங்கள் மீதான இந்த மோதல் தற்போதைய நிர்வாகத்திற்கு முந்தையது; சீனா பல ஆண்டுகளாக தனது பரந்த தொழில்துறைக் கொள்கையின் ஒரு பகுதியாக அந்தக் கனிமங்களின் உற்பத்தியின் மீது கிட்டத்தட்ட முழுமையான கட்டுப்பாட்டைக் கட்டியெழுப்பியுள்ளது.

அரிய பூமி கனிமங்கள் என்பவை ஸ்காண்டியம் scandium இட்ரியம் (yttrium )மற்றும் லேந்தனைடுகள் ( lanthanides.) ஆகியவற்றால் ஆன கால அட்டவணையில் உள்ள 17 உலோகத் தனிமங்களை உள்ளடக்கியவை.
“அரிய பூமி கனிமங்கள்” என்ற பெயர் சற்று தவறானதாகும் ஏனெனில் இந்த பொருட்கள் பூமியின் மேலோடு முழுவதும் காணப்படுகின்றன. அவை தங்கத்தை விஅதிகமாகவே உள்ளன ஆனால் அவற்றை பிரித்தெடுப்பதும் பதப்படுத்துவதும் கடினம் மற்றும் அதிக செலவு பிடிக்கும்; மேலும் அவை சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியவையாகவும் உள்ளன.
அரிய பூமி கனிமங்கள் எதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன?
ஸ்மார்ட்போன்கள் முதல் காற்றாலை விசையாழிகள் wind turbines எல்.இ.டி விளக்குகள் மற்றும் தட்டையான திரை டி.வி.க்கள் வரை அன்றாட தொழில்நுட்பங்கள் அனைத்திலும் அரிய பூமி கனிமங்கள் பரவலாகக் காணப்படுகின்றன.
அவை மின்சார வாகனங்களுக்கான மின்கலங்கள் அத்துடன் எம்.ஆர்.ஐ ஸ்கேனர்கள் மற்றும் புற்றுநோய் சிகிச்சைகளுக்கும் மிகவும் இன்றியமையாதவை.
