வடக்குமாகாண அதிகாரிகள் மத்தியில் செயற்கை நுண்ணறிவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான விசேட பயிற்சி திட்டம் வடமாகாணத்தின் பிரதம செயலாளரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
அரசசேவையை மாற்றுவதற்கான பயிற்சி என்ற இந்த செயலமர்வை ஜனாதிபதி செயலகம் டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது
டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் செயற்கை நுண்ணறிவுதொழில்நுட்பம் மூலம் பொதுத்துறைக்குள் புதுமை மற்றும் சீர்திருத்தத்தை வளர்ப்பது பொது சேவை வழங்கலின் செயல்திறனை மேம்படுத்துவது வெளிநாட்டு பயிற்சி வாய்ப்புகளுக்கான பாதைகளை உருவாக்குவது டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கைகளுக்குத் தயாராகுதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் ஹான்ஸ் விஜேசூரிய விசேட உரையை நிகழ்த்தினார்.
