முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு இன்டிபென்டன்ஸ் அவனியுவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து அடுத்த சில நாட்களில் வெளியேறுவார் என அவரது ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது அவர் தனதுஉடமைகளை அந்த வீட்டிலிருந்து வெளியேற்றிவருகின்றார்.
ஜனாதிபதிகள் உரிமைகள் சட்டம் ( இரத்துச்செய்தல்) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னாள் ஜனாதிபதி நவம்பர் 30 வரை காலஅவகாசத்தை கோரியிருந்தார்.
