இந்திய அரசியல்வாதிகள் மத்தியில் அச்சம்-இந்திய அரசியல்வாதிகளின் முதலீடுகளை வெளியிடப் போகும் Perplexity!

இந்தியாவை சேர்ந்த அரசியல்வாதிகள் தங்களுடைய பணத்தை குறிப்பிட்ட சில நிறுவனங்களிலும் பங்குச்சந்தைகளிலும் கணிசமான அளவு முதலீடு செய்து லாபம் பார்க்கிறார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் தாங்கள் எதில் முதலீடு செய்திருக்கிறோம் என்ற விவரங்களை வெளிப்படையாக வெளியிடுவது கிடையாது. ஆனால் அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலைமை அப்படி இல்லை.

அமெரிக்காவில் அரசியல் தலைவர்கள் எம்பிக்கள் எந்தெந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் முதலீடு செய்திருக்கிறார்கள் இ அதில் எப்படி வர்த்தகம் செய்து லாபம் பார்க்கிறார்கள் என்ற விவரங்கள் வெளிப்படையாக தெரியும். பெரும்பாலான முதலீட்டாளர்கள் இதுபோன்ற அரசியல் தலைவர்கள் எம்பிக்கள் உள்ளிட்டவர்களின் போர்ட்போலியோவை பின்தொடர்ந்து அதற்கேற்ற வகையில் தங்களுடைய முதலீடுகளை கூட மாற்றி அமைத்துக் கொள்வார்கள். ஆனால் இந்தியாவில் அப்படி ஒரு நிலைமை இதுவரை கிடையாது.

பெர்பிளெக்சிட்டி நிறுவனம் பெர்பிளெக்சிட்டி ஃபைனான்ஸ் என்ற வசதியை கொண்டு வந்துள்ளது. இதில் அமெரிக்க அரசியல்வாதிகளின் பங்குச்சந்தை நடவடிக்கைகள் அப்டேட்களுடன் பயனர்களுக்கு காண்பிக்கப்படுகிறது. இதனை பெர்பிளெக்சிட்டி தலைமை செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் அம்ரித் என்பவர் இந்திய அரசியல்வாதிகள் எதில் எல்லாம் முதலீடு செய்து வர்த்தகம் செய்கிறார்கள் என்பதை நான் எப்படி ட்ராக் செய்வது அமெரிக்காவில் நான்சி பெலோசியின் போர்ட்போலியோவை பின்தொடர்ந்து பல்வேறு வர்த்தகர்களும் பெரிய அளவில் லாபம் பார்க்கிறார்கள் அதேபோன்ற ஒரு விஷயத்தை நான் இந்தியாவிலும் மேற்கொள்ள வேண்டும் வழக்கமாக தேர்தலில் நிற்கும் போது பிரமாண பத்திரத்தில் எதில் எல்லாம் முதலீடு செய்து இருக்கிறோம் என்பதை அரசியல்வாதிகள் தாக்கல் செய்வார்கள் ஆனால் சாதாரண நாட்களில் அந்த விவரங்கள் பொதுமக்களாகிய எங்களுக்கு தெரிய வருவதில்லை என கேள்வி எழுப்பியிருக்கிறார் .

அதற்கு பதில் அளித்திருக்கும் பெர்பிளெக்சிட்டி தலைமை செயல் அதிகாரியான அரவிந்த் ஸ்ரீனிவாஸ் அடுத்த சில வாரங்களுக்குள் இந்திய அரசியல்வாதிகள் எதில் எல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்ற விவரம் வெளியிடப்படும் என தெரிவித்திருக்கிறார் . எனவே பெர்பிளெக்சிட்டி ஃபைனாஸ் கூடிய விரைவில் இந்திய பயனர்களுக்கும் இந்த வசதியை கொண்டு வர இருப்பது உறுதியாகியுள்ளது.


பங்குச்சந்தை முதலீட்டாளர்களை பொறுத்தவரை இந்த வசதி மேலும் வெளிப்படைத் தன்மையை கொண்டு வரும். பெர்பிளெக்சிட்டி இதனை இந்தியாவில் கொண்டு வந்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் பெர்பிளெக்சிட்டி ஃபைனான்ஸ் பெரிய அளவில் பிரபலமாகும். அதே வேளையில் எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பான மாற்று கருத்துகளும் முன் வைக்கப்படுகின்றன. இந்திய அரசியல் தலைவர்கள் பலரும் பினாமி மூலமாகவே முதலீடுகளை மேற்கொள்வார்கள் என்பதால் அமெரிக்கா போன்ற வெளிப்படை தன்மை இருக்குமா என்பதே சந்தேகமா என சிலர் கூறுகின்றனர்.

அரசியல்வாதிகளின் பங்குச்சந்தை நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிய வந்தால் அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகளுக்கும் பரஸ்பர வார்த்தை மோதல்களுக்கும் வழிவகுத்து பெரிய பூகம்பத்தை உண்டாக்கும் என சிலர் கருத்து கூறுகின்றனர்.

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்