2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் அரசாங்கத்தின் நிதி நிலை கணிசமாக வலுப்பெற்றது மானியங்களைத் தவிர்த்து மொத்த வருமானம் 24.8 சதவீதம் உயர்ந்து ரூ. 2321.7 பில்லியனாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ. 1,860.6 பில்லியனாக இருந்தது.
2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர மதிப்பீட்டில் 46.8 சதவீதத்தை எட்டியுள்ள இந்த செயல்திறன் வரி வருவாயில் 25.9 சதவீத அதிகரிப்பால் பெருமளவில் உந்தப்பட்டது. ஆறு மாத காலத்திற்கு வரி வருமானம் ரூ. 2152.1 பில்லியனை எட்டியது இது 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் சேகரிக்கப்பட்ட ரூ. 1,709.3 பில்லியனை விட கணிசமான அதிகரிப்பாகும்
இந்த வலுவான செயல்திறனுக்கு கொள்கை சார்ந்த நிதி ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மற்றும் மேம்பட்ட வருவாய் நிர்வாகத்தின் முழு தாக்கமே காரணம். உள்நாட்டு பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி மற்றும் முக்கியமாக வாகன இறக்குமதி மீதான தடையை நீக்குவது உட்பட இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கியது ஆகியவை வருமான அதிகரிப்பில் கணிசமான செல்வாக்கை செலுத்தியுள்ளன
மதிப்பு கூட்டப்பட்ட வரி (vat ) மிகப்பெரிய ஒற்றை வருவாய் ஆதாரமாகத் தொடர்ந்து வருமானத்தில் 34 சதவீதத்திற்கு பங்களிப்பு செய்துள்ளது.
வற்வரி மூலமான வருமானம்குறிப்பிடத்தக்க அளவில் 27.6 சதவீதம் அதிகரித்து ரூ. 787.3 பில்லியனை எட்டியது. விரிவாக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் விகிதம் வற்வரி18 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில் இறக்குமதிகள் மீதான வற்வரி 34.3 சதவீதம் உயர்ந்து ரூ. 354.0 பில்லியனாக உயர்ந்தது இது மோட்டார் வாகன இறக்குமதி விதிகளின் தளர்வை நேரடியாக பிரதிபலிக்கிறது.