ஆப்கானிஸ்தானின் வடபகுதியை உலுக்கியுள்ள பூகம்பத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஆப்கானின் பெரிய நகரங்களில் ஒன்றான ஐம்பதினாயிரத்திற்கும் அதிகமானவர்கள் வசிக்கும் மசார் ஷரீபினை பூகம்பம் தாக்கியுள்ளது.
பூகம்பம் மையம்கொண்டிருந்த சமங்கன் மாவட்டத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.மீட்பு பணிகள் தொடர்வதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மசார் ஈ ஷரீபில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதுடன் 120 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என உள்ளுர் சுகாதார அதிகாரியொருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
