23 வயதில் பில்லியனர் கிளப்பில் இணைந்த 3 நண்பர்கள்.. AI மூலம் சாதித்த இந்திய வம்சாவளி இளைஞர்கள்..!!

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் அசுர வளர்ச்சிக்கு சான்றாக, அமெரிக்காவின் சிலிக்கான் வேலியைச் சேர்ந்த மூன்று 22 வயது உயர்நிலைப் பள்ளி நண்பர்கள், உலகின் மிக இளம் வயது பில்லியனர்களாக உருவெடுத்துள்ளனர். இவர்களில் இருவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்.

மார்க் ஜுக்கர்பெர்க்கை முந்தியது எப்படி..?: சான் பிரான்சிஸ்கோவை மையமாக கொண்ட AI பணியமர்த்தல் தளமான ‘Mercor’-ன் இணை நிறுவனர்களான ப்ரெண்டன் ஃபுடி (Brendan Foody), ஆதர்ஷ் ஹிரேமத் (Adarsh Hiremath), மற்றும் சூர்யா மிதா (Surya Midha) ஆகியோர் சமீபத்தில் தங்கள் நிறுவனம் 350 மில்லியன் டாலர் நிதி திரட்டியதாக கூறியுள்ளனர்.

..!!
இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மதிப்பு 10 பில்லியன் டாலராக உயர்ந்ததால், இந்த மாபெரும் சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். 23 வயதில் பில்லியனரான மெட்டா இணை நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சாதனையை இந்த இளைஞர்கள் முறியடித்துள்ளனர்.

நிறுவனத்தின் 10 பில்லியன் டாலர் மதிப்பீட்டின்படி, சுமார் 22% பங்குகளை வைத்திருக்கும் இந்த 3 நிறுவனர்களுக்கும், தலா 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான நிகர சொத்து மதிப்பு கிடைத்துள்ளது.

இந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) ப்ரெண்டன் ஃபுடி உள்ளார். தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக (CTO) ஆதர்ஷ் ஹிரேமத் உள்ளார். இவரது பெற்றோர் கர்நாடகாவில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள். அதேபோல், நிர்வாகக் குழு தலைவராக சூர்யா மிதா உள்ளார். இவரது பெற்றோர் டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்குக் குடிபெயர்ந்தவர்கள்.

இந்த மூவரின் வெற்றிப் பயணம் சான் ஜோஸில் உள்ள பெல்லார்மைன் கல்லூரி ஆயத்தப் பள்ளியில் தொடங்கியது. அங்கு, தேசிய விவாதப் போட்டிகளுக்கான இரவு நேரத் தயாரிப்பின்போது இவர்களுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. பிற்காலத்தில் இவர்கள் மூவரும் ஒன்றாக இணைந்து தொழில்முனைவோராக மாறியுள்ளனர்.

உயர்நிலைப் பள்ளிக்குப் பிறகு இவர்கள் வெவ்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு சென்ற நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இவர்கள் ‘Mercor’ நிறுவனத்தை தொடங்கினர். ஆரம்பத்தில், இந்தியாவில் உள்ள மென்பொருள் பொறியாளர்களை அமெரிக்காவின் புதிய நிறுவனங்களுடன் இணைக்கும் ஒரு ஆன்லைன் ஃப்ரீலான்ஸ் சந்தையாக இது இருந்தது.

ஆனால், ChatGPT போன்ற அடிப்படை AI மாடல்களை மேம்படுத்தத் தேவைப்பட்ட மனிதத் தலையீடு கொண்ட சேவைகளுக்கான தேவை நீடித்தபோது, இந்த நிறுவனம் விரைவாகத் தனது பாதையை மாற்றிக்கொண்டது. தற்போது, Mercor ஒரு AI-யால் இயக்கப்படும் தளமாக வளர்ந்துள்ளது.

இது சட்டம், மருத்துவம், நிதி மற்றும் பொறியியல் போன்ற துறைகளில் உள்ள 30,000-க்கும் மேற்பட்ட நிபுணர்களை கொண்டுள்ளது. இந்த நிபுணர்கள், AI அல்காரிதம்களால் செய்ய முடியாத நுணுக்கமான மனித தீர்ப்பைச் செலுத்தவும், தரவுகளை லேபிள் செய்யவும், காட்சிகளை உருவகப்படுத்தவும் பணம் பெறுகிறார்கள்.

Mercor நிறுவனம் 2024 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 500 மில்லியன் டாலர் மதிப்பை கடந்தது. கல்லூரியை தவிர்க்க உதவும் திலீல் ஃபெல்லோஷிப் வாயிலாக ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம், மிகவும் விரைவாக நிதி திரட்டியது. பின்னர், Meta நிறுவனம் Mercor-ன் முக்கிய போட்டியாளர் ‘Scale AI’-யை 14.3 பில்லியன் டாலர் செலவில் வாங்கியது. இதனால், பல பெரிய AI நிறுவனங்கள் Mercor-இடையிலான வாய்ப்புகளுக்கு ஈர்க்கப்பட்டன. Mercor-க்கு கிடைத்த 350 மில்லியன் டாலர் முதலீடு, நிறுவனர் குழுவை பில்லியனர்கள் பட்டியலில் சேர்க்க காரணமாக அமைந்தது

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்