வெனிசுலாவிற்குள் இருக்கும் இராணுவ வசதிகள் உள்ளிட்ட தளங்கள் மீது தாக்குதல் நடத்த டிரம்ப் உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள், சிபிஎஸ் நியூஸிடம் (CBS News) தெரிவித்துள்ளனர்.
தேசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்துப் பேசுவதற்காக, பெயர் வெளியிட விரும்பாத இரண்டு அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் (CBS News) கூறியதாவது: வெனிசுலாவில் தரைவழித் தாக்குதல்களை நடத்துவதற்கு, உண்மையான நடவடிக்கை தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பே அதிபர் டிரம்ப் அமெரிக்க ராணுவத்திற்குப் பச்சைக்கொடி காட்டிவிட்டார்.
கிறிஸ்துமஸ் தினத்தில் இந்தத் திட்டத்தை செயல்படுத்த ராணுவ அதிகாரிகள் ஆலோசித்தனர். ஆனால், நைஜீரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) இலக்குகளுக்கு எதிரான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டதாக அந்த ஆதாரங்கள் தெரிவித்தன.
கிறிஸ்துமஸைத் தொடர்ந்த நாட்களில் தாக்குதல் நடத்துவதற்கான கூடுதல் வாய்ப்புகள் ராணுவ அதிகாரிகளுக்குக் கிடைத்தன. இருப்பினும், வானிலை காரணமாக அந்த நடவடிக்கை தள்ளி வைக்கப்பட்டது. திட்டத்தின் வெற்றிக்கு சாதகமான வானிலை நிலவ வேண்டும் என்று அமெரிக்க ராணுவம் விரும்பியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்