சனிக்கிழமை அதிகாலை அமெரிக்கா நடத்திய ராணுவத் தாக்குதல்களைத் தொடர்ந்து, வெனிசுலா அரசாங்கம் தனது ஆதரவாளர்களை வீதிகளில் இறங்கிப் போராடுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
அரசாங்கத்தின் அறிக்கையில், “மக்களே வீதிக்கு வாருங்கள்! நாட்டின் அனைத்து சமூக மற்றும் அரசியல் சக்திகளும் ஒன்றுதிரண்டு, இந்த ஏகாதிபத்தியத் தாக்குதலைக் கண்டித்து போராட்டங்களை முன்னெடுக்குமாறு பொலிவேரியன் அரசாங்கம் (Bolivarian Government) கேட்டுக்கொள்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ “அனைத்து தேசிய பாதுகாப்புத் திட்டங்களையும் செயல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்” என்றும், “வெளிப்புற இடையூறுகளுக்கான அவசர நிலையை” (state of external disturbance) பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அவசர நிலை பிரகடனம், மக்களின் உரிமைகளை நிறுத்தி வைக்கவும், ஆயுதப் படைகளின் அதிகாரத்தை விரிவுபடுத்தவும் அதிகாரம் அளிக்கிறது.
