வெனிசுலா மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள் சர்வதேசச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்டவை, இருப்பினும் நிக்கோலஸ் மதுரோவிற்கு எதிரான குற்றவியல் விசாரணை அமெரிக்காவில் தொடர வாய்ப்புள்ளது என்று ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
லண்டனைச் தளமாகக் கொண்ட ‘சாதம் ஹவுஸ்’ (Chatham House) சிந்தனைக் குழுவின் சர்வதேசச் சட்டத் திட்ட இயக்குநரான பேராசிரியர் மார்க் வெல்லர் கூறுகையில், “தேசியக் கொள்கையின் ஒரு கருவியாகப் பலத்தைப் பயன்படுத்துவதை (use of force) சர்வதேசச் சட்டம் தடை செய்கிறது,” என தெரிவித்துள்ளார்
“ஒரு ஆயுதமேந்திய தாக்குதலுக்குப் பதிலடியாகவோ அல்லது அழிவின் விளிம்பில் இருக்கும் மக்களைக் காப்பாற்றுவதற்காகவோ மட்டுமே ராணுவ பலத்தைப் பயன்படுத்த முடியும். தெளிவாகப் பார்த்தால், வெனிசுலாவுக்கு எதிரான இந்த ராணுவ நடவடிக்கையில் இந்தத் தகுதிகள் எதுவும் பூர்த்தி செய்யப்படவில்லை,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்
போதைப்பொருள் கடத்தலை ஒடுக்குவதில் அமெரிக்காவிற்கு இருக்கும் ஆர்வம் அல்லது மதுரோ அரசாங்கம் ஒரு குற்றவியல் நிறுவனம் என்ற அமெரிக்காவின் வாதம், இந்தத் தாக்குதலுக்கு எந்தவிதமான “சட்டப்பூர்வ நியாயத்தையும் வழங்காது” என்று வெல்லர் என தெரிவித்துள்ளார்
இருப்பினும், 1989-இல் பனாமா மீது அமெரிக்கா படையெடுத்ததையும், அதன் அதிபர் மானுவல் நோரியேகா பிடிபட்டு போதைப்பொருள் குற்றச்சாட்டுகளுக்காக மியாமிக்கு விசாரணைக்குக் கொண்டு வரப்பட்டதையும் முன்னுதாரணமாகக் காட்டி, மதுரோ மீதான விசாரணை நடைபெறலாம் என்று அவர் என தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க நீதிமன்றங்கள் ‘கெர்-ஃபிரிஸ்பி கோட்பாடு’ (Kerr-Frisbie doctrine) என்று அழைக்கப்படுவதைப் பின்பற்றுகின்றன. அந்த சர்ச்சைக்குரிய கோட்பாட்டின்படி, ஒரு சந்தேக நபர் எவ்வாறு அமெரிக்க நீதிமன்றத்தின் முன் கொண்டு வரப்படுகிறார் என்பது முக்கியமல்ல. சட்டவிரோத ராணுவத் தலையீடு அல்லது கடத்தல் மூலம் அவர் கொண்டு வரப்பட்டிருந்தாலும், அந்தச் செயல்பாட்டில் அவர் கடுமையாக சித்திரவதை செய்யப்படாத வரை, விசாரணையைத் தொடர முடியும்,” என்று வெல்லர் தெரிவித்துள்ளார்
