வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி (முதல் பெண்மணி) சிலியா ஃபுளோரஸ் ஆகியோர் தற்போது எங்கே இருக்கிறார்கள் என்பது அரசுக்குத் தெரியவில்லை என்று அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.
வெனிசுலா மீது அமெரிக்கா “பெரிய அளவிலான தாக்குதலை” நடத்தியதாகவும் மதுரோ மற்றும் அவரது மனைவி இருவரும் பிடிக்கப்பட்டு நாட்டிலிருந்து வெளியே கொண்டு செல்லப்பட்டதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை அதிகாலை அறிவித்திருந்தார்.
“ஜனாதிபதி மதுரோ மற்றும் முதல் பெண்மணியின் உயிர் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்திடம் இருந்து உடனடி ஆதாரத்தை நாங்கள் கோருகிறோம்” என்று துணை ஜனாதிபதிதெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்காவின் இந்தத் தாக்குதலால் நாடு முழுவதும் அரசு அதிகாரிகள் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.