வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா அடேலா புளோரஸ் ஆகியோரின் “கைதுக்கு” பிறகு வெனிசுலாவின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமெரிக்கா தற்போது தீர்மானித்து வருவதாகவும் இதில் அமெரிக்கா “மிகவும் தீவிரமாக ஈடுபடும்” என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பொக்ஸ் நியுஸ்உடன்மேற்கொண்ட தொலைபேசி உரையாடலில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“நாங்கள் இதில் மிகத் தீவிரமாக ஈடுபடுவோம். அந்நாட்டு மக்களுக்கு சுதந்திரம்) கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என்றார். மேலும் அமெரிக்கச் சிறப்புப் படைகளின் இந்தத் துணிச்சலான தாக்குதல் வாஷிங்டனை யாரும் “அலட்சியப்படுத்த முடியாது” என்பதைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா “மிக வலுவாக ஈடுபடப்போகிறது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். “நம்மிடம் உலகின் மிகப்பெரிய மற்றும் சிறந்த எண்ணெய் நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் இதில் பெருமளவில் ஈடுபடுவோம்” என்றார் அவர்.
