வெனிசுலா மீது அமெரிக்கா மேற்கொண்டுள்ள ஊடுருவல் நடவடிக்கையை யாராலும் அங்கீகரிக்க முடியாது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னதெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய முன்னாள் எம்.பி ராஜித சேனாரத்ன “அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. இது தொடருமானால் எந்தவொரு நாடும் மற்றொரு நாட்டின் மீது தன்னிச்சையாகப் படையெடுக்கும் சூழல் உருவாகும்” என்று கூறினார்.
இருப்பினும் வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகளும் தற்போதைய நெருக்கடிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
“வெனிசுலா தீவிரமான சீர்திருத்தங்களில்) கவனம் செலுத்தியிருக்கக் கூடாது. மாறாக கடுமையான சோசலிசத்தைப் பின்பற்றுவதற்குப் பதிலாக சமூக ஜனநாயகத்தைப் பின்பற்றும் சீனாவைப் போன்ற நாடுகளின் பாதையை அது பின்பற்றியிருக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.
