கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையெழுத்திடும் நடவடிக்கையை எதிர்க்கட்சியினர் இன்று (ஜனவரி 7, 2026) ஆரம்பித்தனர்.
தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் உள்ள பாடப்பொருள் தொடர்பான ஏராளமான பிழைகள் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கங்கள், அத்துடன் இப்பிரச்சினைகளுக்குப் பொறுப்பான முறையில் தீர்வுகாணத் தவறியமை ஆகியவற்றை முன்வைத்து இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்படுகிறது.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் இந்தக் கையெழுத்திடும் நிகழ்வு இடம்பெற்றது.
நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலாவது கையெழுத்திட்டார்.
