மாலைதீவிலிருந்து இலங்கை வருபவர்கள் அதிகாரிகளால் நடத்தப்படும் விதம் குறித்து அந்த நாட்டின் தூதுவர் கவலை- மாலைதீவும் பதில் நடவடிக்கைகளை எடுக்கலாம் என எச்சரிக்கை

இலங்கைக்கான மாலைதீவு தூதுவர் மசூத் இமாத், மாலைதீவு சுற்றுலாப் பயணிகள் இலங்கையில் விசா பெறுவதில் எதிர்நோக்கும் இன்னல்கள் குறித்து தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

, “மாலைதீவு பிரஜைகள் விசா பெறுவதற்காக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். வெள்ளை நிறத் தோல் கொண்டவர்களைப் போலவே மாலைதீவு மக்களும் வெளிநாட்டினர்தான் என்பதை அதிகாரிகள் புரிந்து கொள்ளவில்லை எனத் தோன்றுகிறது. வெள்ளை நிறத்துடன் இலங்கைக்கு வருபவர்களை மட்டுமே அதிகாரிகள் ஏன் பார்வையாளர்களாகக் கருதுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை,” என்று அவர் தெரிவித்தார்.

மாலைதீவு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் விசா விண்ணப்பிக்கும் போது பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதேசமயம் பயண முகவர்கள் (Travel Agents) மூலம் விண்ணப்பிக்கப்படும் விசாக்கள் எந்தச் சிரமமுமின்றி உடனடியாக வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

பயண முகவர்கள் மூலம் விசா விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படும்போது, திணைக்களத்திற்குள் இருக்கும் அதிகாரிகளுக்குச் சில நிதி நன்மைகள் (கைக்கூலி) கிடைப்பதையும் தூதுவர் சூசகமாகத் தெரிவித்தார்.

“பயண முகவர்கள் மூலம் விசா விண்ணப்பிக்கும் போது மாலைதீவு மக்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் மாலைதீவு குடிமக்கள் கண்டிக்கப்படுகிறார்கள் மற்றும் சத்தமிடப்படுகிறார்கள். அவர்கள் மாலைதீவு மக்களை சுற்றுலாப் பயணிகளாக நடத்துவதில்லை,” என்று அவர் மேலும் கூறினார்.

சமீபத்திய சம்பவம் ஒன்றைச் சுட்டிக்காட்டிய தூதுவர் மசூத் இமாத், “இரண்டு நாட்களுக்கு முன்புதான், மாலைதீவைச் சேர்ந்த சிரேஷ்ட சுங்க அதிகாரி ஒருவர் விடுமுறைக்காக இங்கு வந்திருந்தார். அந்த அதிகாரி விசாரணைக்காக ஒரு அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அவர் இலங்கையையும் அதன் இயற்கை அழகையும் ரசிப்பதால் மட்டுமே இங்கு வருகை தந்தார்,” எனக் கூறினார்.

இந்த நிலை நீடித்தால், மாலைதீவின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் இலங்கை தொழில் வல்லுநர்கள் தொடர்பான விசா கொள்கையை மாலைதீவு அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய நேரிடும் என்றும் தூதுவர் எச்சரித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்