மட்டக்களப்பில் கடும் மழையினால் கிரானையும் புலிபாய்;ந்தகல்லினையும் இணைக்கும் கிரான் பாலத்திற்கு மேலாக 4அடி உயரத்திற்கு வெள்ள நீர் பாய்ந்து செல்வதால் புலிபாய்ந்த கல் பிரதேசத்திற்கும் கிரானிற்கும் இடையிலான வீதிப்போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக படகுச்சேவை இடம்பெறுகின்றது.
பலகுளங்களில் வெள்ளநீர் நிறைந்ததையடுத்து குளங்களின் வான் கதவுகள் அந்தந்த நீர் மட்டத்திற்கு ஏற்ப திறந்து விடப்பட்டுள்ளன.
மட்டக்களப்பில் மழையுடன் காற்றும் வீசி வருகின்றது.கடல் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் மாவட்டத்தில் உள்ள பிரதான குளங்களில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
இதனையடுத்து உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் 3 அடிக்கும் ஒரு வான்கதவு நான்கு அடிக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.
தாழ்நிலப்பகுதிகளும் நெல்வயல்களும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.
