முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
தனிப்பட்ட பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்றை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் கும்பலைச் சேர்ந்த ஒருவரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவர் இன்று (09) கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கடந்த 2001-ம் ஆண்டு முன்னாள் அமைச்சருக்கு இராணுவத்தினால் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட துப்பாக்கி ஒன்று தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 2019-ம் ஆண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான ‘மாகந்துரே மதூஷிடம்’ நடத்தப்பட்ட விசாரணையின் போது இந்தத் துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.