பெருமளவில் போதைப்பொருள் கைப்பற்றப்பட்ட விவகாரம்- பொலிஸாருக்கு தகவல்வழங்கிய நபரை கொலை முயற்சி – சந்தேகநபர் கைது

கிரிந்த பகுதியில் இடம்பெற்ற பாரிய போதைப்பொருள் சுற்றிவளைப்புடன் தொடர்புடைய இரகசியத் தகவல் வழங்குனரைக் கொல்ல முயன்ற துப்பாக்கிதாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சந்தேக நபர் இரத்தினபுரி பகுதியில் ஒளிந்திருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் யக்கலமுல்ல, காலி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் என்றும், அவர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றி சட்டப்பூர்வமாக விலகிய முன்னாள் உறுப்பினர் என்றும் தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 12ஆம் திகதி கிரிந்த-அண்டகல வெல்ல கடற்கரைப் பகுதியில் சுமார் 350 மில்லியன் ரூபா பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை மற்றும் ஏழு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவத்துடன் இந்த கொலைச் சதி தொடர்புடையது. உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றிருந்தது.

இந்த நடவடிக்கையின் போது, அந்தப் பொலிஸ் பிரிவுடன் தொடர்புடைய உத்தியோகத்தர் ஒருவரின் உறவினரை பொலிஸார் இரகசியத் தகவல் வழங்குனராகப் பயன்படுத்தியிருந்தனர். எனினும், அந்தத் தகவல் வழங்குனரின் அடையாளம் வெளிப்பட்டதையடுத்து, போதைப்பொருள் கடத்தல்காரர்கள் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நேற்று கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, அந்தக் கொலையைச் செய்ய நியமிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கொலைச் சதி குறித்த தகவல்கள் கிடைத்ததையடுத்து, மேல் மாகாண வட குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்தத் திட்டத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரியைக் கைது செய்தனர்.

பொலிஸ் ஜீப் வண்டியைப் போன்ற வாகனத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்ததாக சந்தேக நபர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தகவல் வழங்குனரை அவரது வீட்டிலிருந்து கடத்திச் சென்று, அவரைக் கொலை செய்து, தலையைத் துண்டித்து, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகலவின் வீட்டுத் தோட்டத்தில் வீசுவதே இத்திட்டமாகும். அங்கொட பிரியங்கர எனப்படும் திட்டமிட்ட குற்றவாளி ஒருவரே இக்கொலையைத் திட்டமிட்டதாகவும், தலை துண்டிக்கப்பட்ட பின்னர் அதைக் கொண்டு செல்வதற்கு மேலதிக நபர்கள் உதவிக்கு வழங்கப்படுவார்கள் என்று அவர் தன்னிடம் கூறியதாகவும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

houthis
சவுதிஅரேபிய விமான நிலையம் மீதான தாக்குதல் - ஏற்கனவே பதற்றம் நிறைந்த மோதலில் மற்றுமொரு ஆபத்தான தருணம்
gna12
சிறைச்சாலைக்கு வெளியே பௌத்தமதகுருமார் காவியுடையை அணிய அனுமதிக்கும் புதிய விதிகள் இரண்டுவாரத்திற்குள்- அரசாங்கம் அறிவிப்பு
anojan
அனோஜனின் மரணதண்டனைக்கு எதிரான மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டது.
psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு