மன்னாரில் எதிர்காலத்தில் அனைத்து வலுசக்தி திட்டங்களையும் அங்கு மக்களின் கருத்தொருமைப்பாட்டுடனேயே முன்னெடுப்போம் என சூழல்விவகார பிரதியமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றிற்கு இதனை தெரிவித்துள்ள அவர் மன்னாரில் பல பாரிய வலுசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கான திட்டமிடல்கள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளார்.
எனினும் சுற்றியுள்ள சமூகங்களின் கருத்தொருமைப்பாடு இல்லாமல் ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களிற்கு அப்பால் புதிய திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது மன்னாரில் 70 மெகாவாட் ஒருங்கிணைந்த உற்பத்தி திறன் கொண்டகாற்றாலை மின் திட்டங்களிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதியமைச்சர்இதில் ஏற்கனவே கட்டுமானப்பணிகள் ஆரம்பமான 20 மெகாவாட்திட்டமும் கோரப்பட்ட டென்டர் கோரப்பட்ட 50 மெகாவாட் திட்டமும்உள்ளதாக தெரிவித்துள்ளார்
சூழல் பாதிப்பு குறித்த கரிசனைகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரதியமைச்சர் 20மெகாவாட் திட்டத்தில் சில பிரச்சினைகள் உள்ளன
நீர் ஓட்டத்தை செயல்படுத்த வடிகால் அமைப்பு தொடர்பான ஒரு பிரச்சினை இங்கே இருந்தது. இருப்பினும் பொதுமக்களிடையே பரப்பப்படும் சில பிரச்சினைகள் தவறானவை. அப்பகுதியில் மணல் அள்ளும் அனைத்து முயற்சிகளையும் நாங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம்என தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் தலையீட்டைத் தொடர்ந்து சுற்றியுள்ள சமூகங்களின் கவலைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அந்தப் பகுதியில் வடிகால் அமைப்பை மேம்படுத்துவதற்கான சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன
சில தரப்பினரால் கூறப்படுவது போல் மன்னார் தீவில் பரவலான சுற்றுச்சூழல் சீரழிவு எதுவும் நடைபெறவில்லை என்று ஜெயக்கொடி வலியுறுத்தினார் மேலும் இந்த விஷயத்தில் சரியான அறிவு இல்லாததால் இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகள் எழுந்துள்ளன என தெரிவித்துள்ளார்.
இருப்பினும் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களால் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாக காற்றாலை மின் திட்டங்களை செலவு-பயன் பார்வையில் இருந்து மதிப்பிட வேண்டும் என்றும் 2028 ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதன் எரிசக்தி உற்பத்தி திறனை அதிகரிக்கத் தவறினால் நாடு மீண்டும் தினசரி மின்வெட்டு காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவித்துள்ளார்.