ஈரானியத் தாக்குதல்களுக்குப் பின்னர் மீண்டும் செயல்பாடுகளை ஆரம்பிக்க ஊழியர்கள் முயன்றபோது, கத்தாரின் ரஸ் லஃப்பான் (Ras Laffan) எரிவாயு ஏற்றுமதி முனையத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்துள்ளதுடன் 18 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தினொன்றுக்கு 1.4 பில்லியன் கன அடி கொள்ளளவைக் கொண்ட பார்சான் (Barzan) உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு மற்றும் தீ விபத்து, ஏற்கனவே போர் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஈரானின் இறுக்கமான கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி சந்தையில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது.
இந்தச் சம்பவத்தை கத்தார் எனர்ஜி (QatarEnergy) நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளதுடன், சேதங்கள் பெருமளவில் இருக்கலாம் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இது மின்சாரம் மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் (Water desalination) திட்டங்களுக்கு அவசியமான எரிவாயு விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டை ஏற்படுத்தலாம் என்ற அச்சத்தை தோற்றுவித்துள்ளது.