வேர்ல்ட் ஃபைனான்ஸ் விருது விழாவில் மூன்று முக்கிய வங்கி அங்கீகாரங்களை வென்றது சம்பத் வங்கி

வேர்ல்ட் ஃபைனான்ஸ் வங்கி விருதுகள் 2026 (World Finance Banking Awards 2026) நிகழ்வில், சம்பத் வங்கி பிஎல்சி (Sampath Bank PLC) மூன்று முக்கிய விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளது. அதன்படி, இலங்கையின் சிறந்த சில்லறை வங்கி (Best Retail Bank), சிறந்த வர்த்தக வங்கி (Best Commercial Bank) மற்றும் சிறந்த கார்ப்பரேட் ஆளுமை – இலங்கை 2026 (Best Corporate Governance – Sri Lanka 2026) ஆகிய பட்டங்களை அது சுவீகரித்துள்ளது.

Sampath Bank

பிரித்தானியாவை தளமாகக் கொண்ட ‘வேர்ல்ட் ஃபைனான்ஸ்’ சஞ்சிகையினால் வழங்கப்படும் இவ்விருதுகள், சிறந்த செயல்திறன், புத்தாக்கம், தலைமைத்துவம், வாடிக்கையாளர் மதிப்பு, நீண்டகால நிலைத்தன்மை மற்றும் ஆளுமை ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரித்து வழங்கப்படுகின்றன.

சம்பத் வங்கி, இலங்கையின் சிறந்த சில்லறை வங்கி மற்றும் சிறந்த வர்த்தக வங்கியாகத் தெரிவு செய்யப்படுவது இது 12ஆவது ஆண்டாகும். இது நாடு முழுவதும் உள்ள தனிநபர்கள், தொழில்முனைவோர், நிறுவனங்கள் மற்றும் சமூகங்களின் மாறிவரும் தேவைகளை பூர்த்தி செய்வதில் வங்கியின் தொடர்ச்சியான திறனைப் பிரதிபலிக்கிறது. இவற்றுடன், ‘சிறந்த கார்ப்பரேட் ஆளுமை’ விருதும் சேர்க்கப்பட்டுள்ளமையானது, பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, நெறிமுறை சார்ந்த தலைமைத்துவம் மற்றும் பொறுப்பான நிர்வாகம் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தைப் பேண வங்கி கொண்டுள்ள அர்ப்பணிப்பை மேலும் எடுத்துக்காட்டுகிறது.

இந்த சாதனை குறித்து சம்பத் வங்கியின் மேலாண்மை இயக்குநரும் / தலைமை நிர்வாக அதிகாரியுமான (MD/CEO) சஞ்ஜய குணவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “வேர்ல்ட் ஃபைனான்ஸ் சஞ்சிகையிடமிருந்து இந்த மூன்று அங்கீகாரங்களைப் பெற்றிருப்பது சம்பத் வங்கிக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த விருதுகள் எமது வாடிக்கையாளர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை, எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்குதாரர்களின் நன்மதிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. சில்லறை மற்றும் வர்த்தக வங்கித் துறைக்கான விருதுகள், அர்த்தமுள்ள மதிப்பு மற்றும் புத்தாக்கமான நிதித் தீர்வுகளை எம்மால் தொடர்ந்து வழங்க முடிவதைக் காட்டுகின்றன. அதேநேரம், ஆளுமைக்கான விருது, நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் வழிநடத்தும் எமது கொள்கைகளின் வலிமையை உறுதிப்படுத்துகிறது. ஒட்டுமொத்தமாக, இந்த சாதனைகள் இலங்கையின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும் ஒரு வலுவான, எதிர்காலத்திற்குத் தயாரான நிதி நிறுவனத்தைக் கட்டியெழுப்புவதற்கான எமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகின்றன,” என்று கூறினார்.

நிதிச் செயல்திறன், புத்தாக்கம், செயல்பாட்டுத் திறன், வாடிக்கையாளர் அனுபவம், நிலைத்தன்மை, தலைமைத்துவம் மற்றும் ஆளுமை ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு கடுமையான மதிப்பீட்டு செயல்முறையின் மூலமே வேர்ல்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் நிதி நிறுவனங்களை மதிப்பிடுகிறது. இந்த சஞ்சிகையின் உலகளாவிய பார்வையும், கடுமையான தேர்வுத் அளவுகோல்களும் இவ்விருதுகளை சர்வதேச வங்கித் துறையில் ஒரு மதிக்கத்தக்க அளவுகோலாக மாற்றியுள்ளன.

கார்ப்பரேட் ஆளுமைக்காக சம்பத் வங்கி பெற்றுள்ள இந்த அங்கீகாரமானது, வங்கியின் வலுவான பணிப்பாளர் சபை மேற்பார்வை, சுறுசுறுப்பான இடர் மேலாண்மை நடைமுறைகள் மற்றும் பொறுப்புணர்வு மற்றும் நெறிமுறை நடத்தைக்கு முன்னுரிமை அளிக்கும் கலாச்சாரம் ஆகியவற்றால் ஆதரிக்கப்படும் ஒரு ஒருங்கிணைந்த ஆளுமை கட்டமைப்பின் வலிமையை பிரதிபலிக்கிறது. இந்த அடித்தளங்கள், வேகமாக மாறிவரும் நிதிச் சூழலில் வங்கியின் பின்னடைவுத் திறன், ஸ்திரத்தன்மை மற்றும் பங்குதாரர்களுக்கு நிலையான மதிப்பை உருவாக்கும் ஆற்றல் ஆகியவற்றிற்கு தொடர்ந்து பக்கபலமாக அமைகின்றன.

வங்கியின் ஆளுமை, நிலைத்தன்மை மற்றும் பொறுப்பான வங்கிச் செயல்பாடுகளுக்கான வலுவான வரலாற்றுப் பதிவுகளின் தொடர்ச்சியாகவே இந்த புதிய விருதுகள் அமைந்துள்ளன. இதற்கு முன்னர், 2024 இல் யூரோமனி (Euromoney) அமைப்பினால் ‘கார்ப்பரேட் பொறுப்புக்கான ஆசியாவின் சிறந்த வங்கி’ (Asia’s Best Bank for Corporate Responsibility) விருதும், 2025 இல் ‘ESG க்கான இலங்கையின் சிறந்த வங்கி’ (Sri Lanka’s Best Bank for ESG) விருதும் சம்பத் வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த அனைத்து சாதனைகளும் இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றாக சம்பத் வங்கியின் நிலையை வலுப்படுத்துவதுடன், முறையான ஆளுமை, பொறுப்பான வங்கிச் சேவை மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட புத்தாக்கங்கள் மூலம் நீண்டகால மதிப்பை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றன.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்