கணினி பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு-கிளிநொச்சி

Child Action Lanka நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்ற அடிப்படை கணினி பயிற்சி நெறி சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது
Child Action Lanka நிறுவனத்தின் அனுசரணையில் நடத்தப்பட்ட அடிப்படை கணினி பயிற்சி நெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சிறப்புற நடைபெற்றது.(30.06.2026)
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாஜினி இன்பராஜ் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
May be an image of smiling and text
நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நளாஜினி இன்பராஜ் அவர்கள்,
இவ்வாறான பயிற்சி நெறிகளை தனியார் நிறுவனங்களில் கற்க வேண்டுமாயின் அதிகளவிலான கட்டணங்களைச் செலுத்த வேண்டியிருப்பதோடு, யாழ்ப்பாணம் அல்லது வவுனியா போன்ற பகுதிகளுக்குச் சென்று பயிற்சியைத் தொடர வேண்டிய நிலையும் காணப்படுவதாக தெரிவித்தார். அதற்காக போக்குவரத்து, உணவு உள்ளிட்ட மேலதிக செலவுகளையும் நேரத்தையும் ஒதுக்க வேண்டியிருப்பதால் பல மாணவர்கள் பயிற்சி நெறிகளை இடைநிறுத்தும் சூழ்நிலை உருவாகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், Child Action Lanka நிறுவனம் அக்கராயன்குளம் மற்றும் அம்பாள்குளம் பகுதிகளில் சிறுவர்களை மையப்படுத்திய செயற்றிட்டங்களை முன்னெடுத்து, இவ்வாறான பயிற்சி வாய்ப்புகளை வழங்கி வருவது மிகவும் பாராட்டத்தக்க செயற்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
May be an image of dais
மேலும், இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் தொழில்நுட்பத்துடன் இணைந்து அதன் நன்மை, தீமைகளைப் பிரித்தறிந்து பொறுப்புடன் செயற்படுவது மிகவும் அவசியம் என வலியுறுத்திய அவர், இத்தகைய பயிற்சித் திட்டங்களை முன்னெடுத்து வரும் Child Action Lanka நிறுவனத்தினருக்கு தனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
நிகழ்வின் நிறைவில், அடிப்படை கணினி கற்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
May be an image of smiling and text
இந் நிகழ்வில் கரைச்சி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு. ராஜ் வினோத், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. திருமாறன், திரு. A. லிஸ்டன் ரஜனிகாந்த், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் – மனிதவளப் பிரிவு,கரைச்சி பிரதேச செயலக திறன்விருத்தி உத்தியோகத்தர் திருமதி.விஜிதா,
Child Action Lanka நிறுவனத்தின் பிரதிநிதி திரு. D.M.O.T.K. பண்டார, பயிற்சியை நிறைவு செய்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

psta no
பயங்கரவாதம் என்றால் என்ன?
king-khalid-international-airport-in-riyadh-saudi-arabia-ZP26XTI4CVFERI4HMUEAT6LVXU
சவுதிஅரேபிய விமானநிலையத்தின் மீது தாக்குதல்- அனோஜன் விவகாரத்திற்காக சென்ற குழுவினர் நாடு திரும்ப முடியாத நிலையில்
vaharai prawn
வாகரைப் பிரதேசத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரத்தையும் அழிக்கும் இறால் பண்ணை அபிவிருத்தித் திட்டத்தைக் கைவிட வேண்டும்
saudhi airport att
சவுதி தலைநகரில் விமானநிலையத்தின் மீது தாக்குதல் - 12 பேர் பலி
shipsss
இலங்கை கடற்பரப்பிற்கு வெளியே நங்கூரமிட்டுள்ள ஈரானிய கப்பல்களில் இலங்கையர்? அரசாங்கம் தெரிவிப்பது என்ன?
navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்