கிளிநொச்சி மாவட்ட பிராந்திய தொழில்துறை மன்ற (Regional Industrial Forum) அங்குரார்பண ஆரம்ப கட்ட கலந்துரையாடல்

கிளிநொச்சி மாவட்ட பிராந்திய தொழில்துறை மன்ற (Regional Industrial Forum) அங்குரார்பண ஆரம்ப கட்ட கலந்துரையாடல், மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். முரளிதரன் அவர்களின் தலைமையில், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தொழில்துறை தொடர்புகளுக்கான பணிப்பாளர் அனுர வீரக்கோன், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் உதவிப் பணிப்பாளர் வஜிர பண்டார மற்றும் உதவிப் பணிப்பாளர் W.D. பிரபாத் மதுசங்க ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்றைய தினம் (08.07.2026) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் அனைவரையும் வரவேற்று மாவட்ட அரசாங்க அதிபர் கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்ட தொழில்துறை மன்றமானது 2018 காலப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போதும், அதன் செயற்பாடுகள் ஸ்தம்பித நிலையிலேயே காணப்பட்டது.
இந் நிலையில் தேசிய ரீதியான தரவுகளை நோக்கும்போது, கிளிநொச்சி மாவட்டத்தின் வேலையின்மை வீதம் மிக அதிகமாக காணப்படுவதாக தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறுபட்ட வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன எனத் தெரிவித்தார்.
அதேபோன்று, பாடசாலை கல்வியை பூர்த்தி செய்தவர்கள், பல்கலைக்கழகம் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் கற்கைநெறிகளை பூர்த்தி செய்தவர்கள் என பல்வேறுபட்ட திறன்களைக் கொண்டுள்ள இளம்வயதினர் உள்ளனர். எனவே, கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த தொழில்துறை மன்றம் ஒன்றை உருவாக்குவதன் மூலமாக பல்வேறுபட்ட திறன்களைக் கொண்டுள்ளவர்கள் அவர்களுக்கான சிறப்பான வழிகாட்டுதல்களை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்தார்.
தொடர்ந்து, மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சார்ந்த கட்டமைப்பு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து, கிளிநொச்சி மாவட்ட தொழில்துறை மன்ற நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு, தொழிற்பாடுகளை முன்கொண்டு செல்வது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
May be an image of one or more people, people studying and text
இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளக கணக்காளர், கணக்காளர், கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் தொடர்புடைய திணைக்களத் தலைவர்கள், மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக துறைசார்ந்த உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

navipillay
நவநீதம் பிள்ளை தனது வாழ்நாள் முழுவதும் ஒடுக்கப்பட்ட புறக்கணிக்கப்பட்ட மக்களின் தளம்பாத குரலாக விளங்கிவந்துள்ளார்- கனேடிய தமிழர் பேரவை
hrw
மரணதண்டனைக்கு எதிரான சர்வதேச தினம் இன்று- சவுதி அரேபியாவில் ஆபத்தான நிலை என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிப்பு
ranil 4455
துறவற ஆடை விவகாரத்தினாலேயே 2019 இல் ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது – ரணில்
842033602_1124884036890946_153497222328659022_n
நவநீதம் பிள்ளை எண்ணற்ற மக்களின் மனங்களில் அமைதி நீதி மற்றும் உரிமைகளுக்கான சுடரை ஏற்றிவைத்துள்ளார்- கரி ஆனந்தசங்கரி
sanath jaya
அனோஜனுக்கு பொதுமன்னிப்பு வழங்கவேண்டும் - சனத்வேண்டுகோள்
buddist monks
ஞானசார தேரருக்கு விடுதலை- கண்டியிலிருந்து பாதயாத்திரை கொழும்பை நோக்கி ஆரம்பம்
gna11
துறவற ஆடை என்பது தண்டனையிலிருந்து தப்புவதற்கான மந்திர சீட்டு அல்ல
icc
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக தடைகளை அறிவித்தார் டிரம்ப் - அச்சுறுத்தும் நடவடிக்கை அடிபணிய மாட்டோம் என்கின்றது நீதிமன்றம்
Lantos_Commission_logo
அனோஜனை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் - அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் மனித உரிமைகள் குழு
jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்