யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு கல்வியமைச்சு நடவடிக்கை- அதிபர்கள் ஆளுநரை சந்தித்து பேச்சுவார்த்தை

யாழ். மாவட்டத்தின் கடல் கடந்த தீவுகளிலுள்ள பாடசாலைகளை அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய கல்வி அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களை, கடல் கடந்த தீவுகளின் பாடசாலை அதிபர்கள் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (17.10.2025) சந்தித்துக் கலந்துரையாடினர்.

நெடுந்தீவிலுள்ள 8 பாடசாலைகளில் 6 பாடசாலைகளும், அனலைதீவிலுள்ள 3 பாடசாலைகளும், எழுவைதீவிலுள்ள 2 பாடசாலைகளில் ஒரு பாடசாலையும் அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்படவுள்ளதாகவும் அதிபர்களால் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது. ஏற்கனவே அந்தப் பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் வருவதற்கு பின்னடிக்கும் நிலைமை காணப்படுகின்றது எனவும் அதிகஷ்டப் பிரதேசத்திலிருந்து நீக்கப்பட்டு அந்தக் கொடுப்பனவும் கிடைக்காமல் போனால் நிலைமை இன்னமும் மோசமாகும் என்றும் அதிபர்களால் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இதேநேரம், கடல் கடந்த தீவுகளில் பணியாற்றும் ஏனைய அரச பணியாளர்களுக்கு ஆபத்துக்கொடுப்பனவு (risk allowance) வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆசிரியர்களுக்கு அது இதுவரை வழங்கப்படவில்லை என்பதும் ஆளுநருக்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இது தொடர்பில் நேரடியாக தொடர்புடைய அமைச்சுக்களுடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் பதிலளித்தார்.

இந்தச் சந்திப்பில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்.

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Post

jagath1
சபாநாயகருக்கு எதிராக ஐம்பது குற்றச்சாட்டுகள்
shipsss
ஈரானிய கப்பல்களுக்கு உதவும் திட்டமில்லை- தேசிய நலன்களுக்கே முன்னுரிமை- வெளிவிவகார அமைச்சு
ravikaran11
கடற்படையாலும், கடற்றொழில் அமைச்சாலுமே வடக்கு மீனவர்களுக்கு வறுமை வலிந்து திணிக்கப்படுகின்றது - ரவிகரன் எம்.பி சுட்டிக்காட்டு
pta
பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தடுத்துவைத்தல் சித்திரவதைகளுக்கு வழிவகுக்கும் - சர்வதேச அமைப்பு
Shanakiyan-Rasamanickam-1
கறுப்பு ஜூலை குறித்து விசாரணை செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழு – தமிழ் எம்பிக்களின் வேண்டுகோள் நிராகரிப்பு
amnesty
அனோஜன் தனது கருத்துரிமையை பயன்படுத்தினார் அவருக்கு மரணதண்டனையை நிறைவேற்றுவது அவரது வாழ்வுரிமையை தன்னிச்சையாக பறிப்பதற்கு சமம்- சர்வதேச மன்னிப்புச்சபை
boat1
இலங்கை கடற்பரப்பிற்குள் நுழைவதை தமிழக மீனவர்கள் நிறுத்தவேண்டும்” - இந்தியாவின் நிலைப்பாட்டிற்கு சந்திரசேகர் வரவேற்பு
vijitha pa
புதிய பயங்கரவாத தடைச்சட்டம் - நிபுணர் குழுவின் வரைபில் அரசாங்கம் மாற்றங்களை செய்தது
navipillay
போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்- 2026 சமாதானத்திற்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு
842768191_10165202894937708_5245553425254618274_n
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தேசிய மக்கள் சக்தி தமிழ் மக்களின் எதிர்காலத்தை நிரந்தரமாக இருளுக்குள் தள்ள முயற்சிக்கின்றது- கஜேந்திரன்