சீனா 2026 இல் பறக்கும் கார்களின் உற்பத்தியை பெருமளவில் அதிகரிக்கவுள்ளது.
இதன் மூலம் நகர போக்குவரத்தில்பாரிய பாய்ச்சலை ஏற்படுத்தவுள்ளது.
செலுத்தக்கூடிய திறனையும் பறக்கும் திறனையும் கொண்ட இந்த எதிர்கால வாகனங்கள் அதிகளவு மக்கள் நிறைந்த நகரங்களில் வேகமான சிறப்பான பயணத்தை வழங்கும்.
சீனாவின் நிறுவனம் வருடாந்தம் 10,000 பறக்கும் கார்களை தயாரிக்கவுள்ளது ஏற்கனவே இந்த வகைகார்கள் 7000 கார்களை தயாரிப்பதற்கான உத்தரவுகள் அந்த நிறுவனத்திற்கு கிடைத்துள்ளன.

இந்த மைல்கல் அதிநவீன நகர உட்கட்டமைப்பு மற்றும் குறைந்த உயர காற்றியக்க துறை ஆகியவற்றில் சீனாவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது.
சீனாவின் வான்வெளிகளில் பறக்கும் கார்கள் விரைவில் சாதாரண விடயமாகலாம்.